ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Pak | பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன் இதுதான்?

Ind vs Pak | பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன் இதுதான்?

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவன்

T20 World Cup India vs Pakistan | ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடரில் உலக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது இன்றைய இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி. ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. காலை முதலே இரு நாட்டு ரசிகர்களும் மெல்போர்ன் மைதானம் முன் திரண்டுள்ளதால் அங்கு திருவிழா போல் காட்சி அளிக்கிறது.

  கடந்த 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய அணி தயாராகியுள்ளது. இதற்காக, ஆடும் லெவனை ஒரு வாரத்திற்கு முன்பே தேர்வு செய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். கடைசியாக இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில், தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதும் தொடக்க போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  பாகிஸ்தான் அணியின் தூண்களாக விளக்கும் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். எனவே, இந்த ஜோடியை பிரித்தாலே பந்துவீச்சாளர்களுக்கு பாதி வேலை முடிந்துவிடும். மேலும், ஷகீன் அப்ரிடியின் புயல் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

  Also Read : பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அண்மைக்காலமாக ஆல்-ரவுண்டராக ஜொலித்து வரும் ஹர்திக் பாண்ட்யா மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. பந்துவீச்சில் கடைசிக் கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல், பும்ராவுக்கு பதில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி, ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது. அவர், களம் காணும் பட்சத்தில் 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது சந்தித்த விமர்சனத்துக்கு, பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

  உத்தேச இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, திணேஷ் கார்த்திக்(வி.கீ), அக்ஷர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்சல் படேல், ஹர்ஷ்திப் சிங்

  உத்தேச பாகிஸ்தான் அணி : முகமது ரிஷ்வான் (வி.கீ), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது நவாஸ், இப்திகார் அகமது, ஷான் மசூத், ஆசிப் அலி, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

  Published by:Vijay R
  First published:

  Tags: India vs Pakistan, T20 World Cup