• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணி டாஸ் வென்றால் பேட்டிங்கா? ஃப்ல்டிங்கா? பிட்ச் ரிப்போர்ட்

இந்திய அணி டாஸ் வென்றால் பேட்டிங்கா? ஃப்ல்டிங்கா? பிட்ச் ரிப்போர்ட்

India vs Pakistan

India vs Pakistan

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் துபாய் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. உலக ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டிக்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

    உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை. இதுவரை 20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

    1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இரு அணிகளும் மோதியுள்ளன இதில் அனைத்திலும் இந்தியாவிற்கே வெற்றி முகம். அதே போல் 2007 முதல் 2016 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்து முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஐந்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது.

    சர்வதேச அளவிலான டி 20 போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளனர் இதில் 7 போட்டிகளில் இந்தியா வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. டி20 பயி்ற்சி போட்டியில் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று பலமாக உள்ளது.

    Also Read : டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை இன்னும் அவுட் செய்யாத பாகிஸ்தான்

    துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டின் படி இது பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாகும். இதனால் போட்டியில் சிக்ஸர்கள், பவுண்டரிகளுக்கு பஞ்சாமிருக்காது. பந்துவீச்சை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் சுழற்பந்துக்கு சாதகமாகவும் இறுதி ஓவர்களில் வேகப்பந்திற்கு சாதகமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த மைதானத்தில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக 168 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. துபாய் மைதானம் சேஸிங்கிற்கு அதிகம் கைகொடுக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: