• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021:இந்திய அணியை அச்சுறுத்தும் 2 பாகிஸ்தான் வீரர்கள் - உறுதி செய்யும் ‘ஸ்டாட்ஸ்’

T20 World Cup 2021:இந்திய அணியை அச்சுறுத்தும் 2 பாகிஸ்தான் வீரர்கள் - உறுதி செய்யும் ‘ஸ்டாட்ஸ்’

ரிஸ்வான் - பாபர் அசாம்.

ரிஸ்வான் - பாபர் அசாம்.

பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடி ஜனவரி 1, 2021-க்குப் பிறகு 13 சர்வதேச டி20 போட்டிகளில் 736 ரன்களை 3 சதம், 2 அரைசதம் உட்பட எடுத்துள்ளனர், இதில் 521 ரன்களை இருவரும் தொடக்க வீரர்களாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரின் சூடு இன்னும் ஆறவில்லை, ஆனால் டி20 உலகக்கோப்பை ஜுரம் தொடங்கிவிட்டது. அக்டோபர் 24ம் தேதி இந்திய-பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்தாக டி20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதுகின்றன.

    இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. ஆனால் ஆதிக்கம் என்று பார்த்தால் இந்திய அணிதான் டி20 உலகக்கோப்பையில் 5 போட்டிகளிலும் இந்தியாதான் வென்றுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணியை குறைத்து எடைப்போட்டு விடக்கூடாது ஏனெனில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தல்தான்.

    பாகிஸ்தானின் டி20 தொடக்கக் கூட்டணியான கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் இந்திய அணிக்கு எதிராக அபாயமானவர்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இருவரும் சேர்ந்து 57 என்ற சராசரியில் 736 ரன்களை சேர்ந்து எடுத்துள்ளனர். இது உண்மையில் திகைப்பூட்டும் புள்ளி விவரம்தான். இந்திய தொடக்க ஜோடி ஷிகர் தவான், பிரிதிவி ஷா இதுவரை சேர்ந்து ஆடி 712 ரன்களைச் சேர்த்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவருமே உலகக்கோப்பை டி20 அணியில் இடம்பெறவில்லை.

    மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் சேர்ந்து 600 ரன்களை எடுத்துள்ளனர், ஆனால் மாயங்க் அகர்வால் டி20 செட்-அப்பில் இல்லை. ஆனால் பாபர் அசாம், ரிஸ்வான் ஜோடி ஜனவரி 1, 2021-க்குப் பிறகு 13 சர்வதேச டி20 போட்டிகளில் 736 ரன்களை 3 சதம், 2 அரைசதம் உட்பட எடுத்துள்ளனர், இதில் 521 ரன்களை இருவரும் தொடக்க வீரர்களாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒருமுறை 197 ரன்கள் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. இந்திய தொடக்க பவுல்ர்களுக்கு சிக்கல்தான்.

    அதே போல் தனிப்பட்ட முறையில் பார்த்தால், ரிஸ்வான் அதிக ரன்களை இந்த ஆண்டு எடுத்து முதலிடம் வகிக்கிறார், பாபர் 2ம் இடத்தில் உள்ளார். ரிஸ்வான் 17 போட்டிகளில் 752 ரன்களை விளாசியுள்ளார், அதிகபட்சம் 94 ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் 140. பாபர் அசாம், 553 ரன்களை எடுத்துள்ளார்.

    எனவே இவர்களை பவர் ப்ளேயில் நிற்க விட்டால் பெரிய கஷ்டம்தான் இவர்களுக்கு எதிராக பும்ராவை வைத்து திட்டமிட வேண்டியிருக்கும். அல்லது அஸ்வினை தொடக்கத்தில் கொண்டு வர வேண்டியிருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: