ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலக கோப்பை : இந்தியா வங்கதேசம் இன்று மோதல்.. அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்?

டி20 உலக கோப்பை : இந்தியா வங்கதேசம் இன்று மோதல்.. அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்?

கோப்பு படம்

கோப்பு படம்

போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணிக்கு – ஜிம்பாப்வே அணியுடனான கடைசி போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்துவிடும். எனவே இந்த போட்டி கண்டிப்பாக நடைபெறவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வங்கதேச அணியை எதிர்த்து இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கும் இரு அணிகளின் பலம், பலவீனம், ஆடும் லெவனில் இடம்பெறும் வீரர் உள்ளிட்டவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

  மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை தெரிவித்தாலும் ரத்தாகாமல் ஓவர் குறைக்கப்பட்டாவது போட்டி நடைபெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய அணிக்கு – ஜிம்பாப்வே அணியுடனான கடைசி போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்துவிடும். எனவே இந்த போட்டி கண்டிப்பாக நடைபெறவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கவுள்ளார். ஓபனர் ராகுல் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக ரிஷப் பந்த்தை களமிறக்க வாய்ப்புள்ளது. விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இந்த போட்டியில் அதிரடியை தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தப்போட்டியில் தீபக் ஹூடாவிற்கு பதில் மீண்டும் அக்ஷர் படேலை களமிறக்க திட்டமிட்டுள்ளனர். ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமே. பந்துவீச்சில் புவி, அர்ஷ்தீப் சிங், ஷமி விக்கெட் எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. அஸ்வின் விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கியிருக்கிறார். ஃபீல்டிங்கில் தென் ஆப்ரிக்காவிடம் சொதப்பி தோல்வியை சந்தித்த இந்தியா பாடம் கற்று சுதாரித்து ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Indian cricket team, T20 World Cup