• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தான் போட்டியில் இந்திய வீரர்களின் செயலுக்கு குவியும் பாராட்டு - ரசிகர்கள் வாழ்த்து

பாகிஸ்தான் போட்டியில் இந்திய வீரர்களின் செயலுக்கு குவியும் பாராட்டு - ரசிகர்கள் வாழ்த்து

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை : பாகிஸ்தான அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் செய்த செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் உலக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆஷம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி பேட்டிங்கை தொடங்கும் முன் அணி வீரர்கள் அனைவரும் மண்டியிட்டனர். தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மாக களத்தில் மண்டியிட்டனர். இது ஒரு விழிப்புணர்வு சார்ந்த செயலாகும்.

    அமெரிக்காவில் கடந்தாண்டு கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளெய்ட் இனவெறி காரணமாக போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இதற்கு உலக முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து Black Lives Matter என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டது. இதன் தாக்கம் கிரிக்கெட் அரங்கிலும் ஒலிக்க தொடங்கின. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் மண்டியிட்டு இதற்கான குரல்களை எழுப்ப தொடங்கினார்கள்.

    டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் போது இரு அணி வீரர்களும் மண்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் மண்டியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கையை நெஞ்சில் வைத்து அவர்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உலகம் முழுவதும் கவனம் பெறும் என்பதால் இந்த போட்டியில் இந்திய வீரர்களின் செயல்பாடு ரசிகர்கள் அனைவராலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

    Also read : இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர் தான்.. கோலி, தோனி இல்லை

    இதனிடையே துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை தோற்கடித்து சாதித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: