• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முக்கிய மாற்றம் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முக்கிய மாற்றம் - பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய அணி

இந்திய அணி

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

  • Share this:
    டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும்  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது.  இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல்  எதிர்கொள்கிறது . டி20  உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும்  அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில்  நடைபெறுகிறது.  இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 24 ல்  எதிர்கொள்கிறது .

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பாரக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா உடல் நிலை குறித்து கேள்விகள் எழுந்து வந்தன. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவேஷ் கான் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அணியில் இடம்பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து இறுதி அறிவிப்பு அந்தந்த அணிகள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை  இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அக்ஷர் படேலுக்கு பதிலாக சர்துல் தாகூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.



    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

    விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி

    ரிசர்வ் வீரர்கள் : ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர், அக்ஷர் படேல்

    இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு உதவும் வீரர்களாக இருக்கும் வீரர்கள்

    அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கே. கௌதம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: