• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Pak | விராட் கோலி பொறுப்பான ஆட்டம்... பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு

Ind vs Pak | விராட் கோலி பொறுப்பான ஆட்டம்... பாகிஸ்தானுக்கு 152 ரன்கள் இலக்கு

india vs pakistan

india vs pakistan

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஷம் பந்துவீச்சை தேர்வு செய்தார். துபாய் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணி 60 சதவீதம் வெற்றி பெற்றள்ளது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபுள்.யுவாகி அவுட்டானார். இந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் 3-வது ஓவரில் மீண்டும் ஷஹீன் அப்ரிடி வேகத்தில் கே.எல்.ராகுல் போல்டாகி வெளியேறினார்.

    இந்திய அணி ஓபனிங் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசியதால் நிம்மதியடைந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 6-வது ஓவரில் ஹசன் அலி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணி பவர் பிளேவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்தது.

    இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். விராட் கோலியும் பொறுப்புடன் விளையாடியதால் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. ரிஷப் பந்த் ஒற்றை கையால் இரண்டு சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டு உற்சாகப்படுத்தினார். ஆனால் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய அடுத்த ஓவரிலேயே ஷதாப் கான் பந்தில் தூக்கி அடிக்க முயன்று அவுட்டானார்.

    ரிஷப் பந்தை தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 13 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினர். மற்றொரு புறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். 19-வது ஓவரில் மீண்டும் அட்டாக்கிற்கு வந்த ஷஹீன் அப்ரிடி விராட் கோலி விக்கெட்டை தூக்கினார்.

    இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹீன் அப்ரிடி 3 விக்கெட்களையும் ஹசன் அலி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: