• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Sco | இந்திய அணி பந்துவீச்சு தேர்வு... அணியில் முக்கிய மாற்றத்தை அறிவித்த விராட் கோலி

Ind vs Sco | இந்திய அணி பந்துவீச்சு தேர்வு... அணியில் முக்கிய மாற்றத்தை அறிவித்த விராட் கோலி

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவு போட்டியில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். டாஸ்க்கு பின் பேசிய விராட் கோலி, எனது பிறந்தநாளில் டாஸ் வென்றுள்ளேன். எனது பிறந்தநாள் அன்று விளையாடும் முதல் போட்டி இது என்று சிரித்தப்படியே கூறினார். மேலும் சர்துல் தாகூருக்கு பதிலாக மூன்றாவது சூழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

    இந்திய அணியை பொறுத்தவரை முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பி வந்துள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிகப்படியான ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து அணியை பொறுத்த வரை 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறும் தகுதியை இழந்துவிட்டது.

    இந்திய அணி குரூப் 2 பிரிவில் 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் அடுத்த அணிக்கான போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் அரையிறுதி முன்னேறும் அணி எது என்று முடிவாகும்.

    இந்திய அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யாகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்தீர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: