ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Pak | இந்திய அணி பவுலிங் தேர்வு.. இரு அணியின் ஆடும் லெவன் இதுதான்

Ind vs Pak | இந்திய அணி பவுலிங் தேர்வு.. இரு அணியின் ஆடும் லெவன் இதுதான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

T20 World Cup India vs Pakistan | பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும்படியான மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.

    கடந்த 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய அணி தயாராகியுள்ளது. இதற்காக, ஆடும் லெவனை ஒரு வாரத்திற்கு முன்பே தேர்வு செய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். கடைசியாக இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில், தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதும் தொடக்க போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ்க்கு பின் இந்திய அணியின் கேப்டன், இது ஒரு நல்ல பிட்ச். முதலில் பந்துவீசுவதால் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும். பிரிஸ்பேனில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றோம். இந்திய அணியில் இன்றைய போட்டியில் 7 பேட்ஸ்மேன்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றார்.

    இந்திய அணி : ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, திணேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷ்திப் சிங்

    பாகிஸ்தான் அணி : பாபர் அஷாம், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதீப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், நசீம் ஷா

    Published by:Vijay R
    First published:

    Tags: India vs Pakistan, T20 World Cup