• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை : இந்திய அணி மோதும் போட்டிகள், நேரம் - முழு விவரம்

டி20 உலகக்கோப்பை : இந்திய அணி மோதும் போட்டிகள், நேரம் - முழு விவரம்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

  • Share this:
    ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில், சூப்பர் டுவெல் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.



    இந்த சுற்றில் 8 அணிகள் தலா 4 அணிகள் வீதம் இரு பிரிவுகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் டுவெல் சுற்றுக்கு முன்னேறும்.



    சூப்பர் டுவெல் சுற்றில் இந்தியா குரூப் 2-ல் இடம்பெற்றுள்ளது. குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், குரூப் பி பிரிவில் வெற்றி பெறும் அணி மற்றும் குரூப் ஏ பிரிவில் ரன்னர் அப்பாகும் அணியும் இடம் பெற்றுள்ளன.

    Also Read : தோனி மீண்டும் புதிர்; சிஎஸ்கே அணியில் தன் எதிர்காலம் குறித்து குழப்பம்

    இந்திய அணி போட்டி

    பயிற்சி ஆட்டம் : டி உலகக்கோப்பை தெடாடருக்கு முன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உடன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது. இந்த போட்டி அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 20-ம் தேதி நடைபெறும்.

    அக்டோபர் 24 : இந்தியா - பாகிஸ்தான், நேரம் - இரவு 7.30

    அக்டோபர் 31 : இந்தியா - நியூசிலாந்து, நேரம் - இரவு 7.30

    நவம்பர் 3 : இந்தியா - ஆப்கானிஸ்தான், நேரம் - இரவு 7.30

    நவம்பர் 5 : இந்தியா - குரூப் பி பிரிவில் வெற்றி பெற்ற அணி, நேரம் - இரவு 7.30

    நவம்பர் 8 : இந்தியா - குரூப் ஏ பிரிவில் ரன்னர்ப்பான அணி, நேரம் - இரவு 7.30

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: