• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs PAK | அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் ஷாக்

IND vs PAK | அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த இந்திய வீரர்கள்.. ரசிகர்கள் ஷாக்

Ind vs Pak

Ind vs Pak

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். துபாய் மைதானத்தில் சேஸிங் செய்யும் அணி 60 சதவீதம் வெற்றி பெற்றள்ளது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். ஷஹீன் அப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபுள்.யுவாகி அவுட்டானார். இந்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீள்வதற்கு முன் 3-வது ஓவரில் மீண்டும் ஷஹீன் அப்ரிடி வேகத்தில் கே.எல்.ராகுல் போல்டாகி வெளியேறினார்.

    இந்திய அணி ஓபனிங் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசியதால் நிம்மதியடைந்தனர். ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 6-வது ஓவரில் ஹசன் அலி பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்திய அணி பவர் பிளேவில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்களை பறிகொடுத்துள்ளது.

    கேப்டன் விராட் கோலி நிதானமாக விளையாடி வருவதால் இந்திய அணிக்கு ஆறுதலாக உள்ளது. ரிஷப் பந்த களமிற்கி உள்ளார். இருவரும் சிறந்த பார்டனர்ஷிப் அமைத்தால் இந்திய அணி சிறந்த இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: