ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Sco: ஸ்காட்லாந்து அணிக்கு அதிர்ச்சி தந்த ஜடேஜா, ஷமி கூட்டணி..

Ind vs Sco: ஸ்காட்லாந்து அணிக்கு அதிர்ச்சி தந்த ஜடேஜா, ஷமி கூட்டணி..

Team india

Team india

ஸ்காட்லாந்து வீரர்கள் வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர். மேத்யூ கிராசை 2 ரன்களிலும், ரிச்சி பெரிங்டனை ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற்றி ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி தந்தார் ரவீந்திர ஜடேஜா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

குரூப் ஸ்டேஜில் ஸ்காட்லாந்துடனான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி அந்த அணியினருக்கு அதிர்ச்சி கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்காட்லாந்தை 85 ரன்களுக்கு சுருட்டினர்.

நடப்பு உலக கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்த இந்திய அணி, ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் 210 ரன்கள் குவித்து 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஞ்சிய போட்டிகளில் பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. நமீபியாவுடனான போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தற்போது ஸ்காட்லாந்துடன், இந்திய அணி ஆடி வருகிறது.

டாஸ் வென்ற கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சேவும், கேப்டன் கைல் கோயெட்சரும் களமிறங்கிய நிலையில், 7 பந்துகளுக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்து தடுமாறிக்கொண்டிருந்த ஸ்காட்லாந்து கேப்டன் கைலை 3வது ஓவரில் கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் ஜஸ்பிரித் பும்ரா.

Also read:  பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை – நெட்டிசன்கள் பாராட்டு!

ஸ்காட்லாந்து அணியிலேயே ஓரளவுக்கு ஆடிய ஜார்ஜ் முன்சேவை முகமது சமி வெளியேற்றினார். 19 பந்துகளுக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 24 ரன்களுடன் ஜார்ஜ் நடையைக் கட்டினார்.

மிரட்டிய ஜடேஜா - ஷமி:

இதன் பின்னர் ஸ்காட்லாந்து வீரர்கள் வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர். மேத்யூ கிராசை 2 ரன்களிலும், ரிச்சி பெரிங்டனை ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேற்றி ஸ்காட்லாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி தந்தார் ரவீந்திர ஜடேஜா. பும்ரா தன் பங்குக்கு ஒரு ஓவரை மெய்டனாக்கினார். டி20 போட்டியில் மெய்டன் ஓவராக பந்து வீசுவது சிறப்புக்குரியதாகும்.

சுமாராக ஆடிக் கொண்டிருந்த கேலம் மெக்லியோடை 16 ரன்களுக்கு ஷமி போல்டாக்கினார். 12 பந்துகளுக்கு அதிரடியாக ஆடி 21 ரன்கள் எடுத்த மைக்கேல் லீஸ்கை, ஜடேஜா எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேற்றினார். கிறிஸ் கிரீவ்ஸை அஸ்வின் ஒரு ரன்னில் அவுட்டாக்கினார். இதனைத் தொடர்ந்து சஃபியான் ஷரிஃப் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அலஸ்டையர் இவான்ஸை ரன் ஏதும் எடுக்காமல் போல்டாக்கி வெளியேற்றினார் ஷமி.

Also read: வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் – வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!

17 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 83 ரன்களை எடுத்திருந்த ஸ்காட்லாந்து அணி 100 ரன்களை கடக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது.  ஸ்காட்லாந்து அணி இறுதியில் 17.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்களில் சுருண்டது.

இந்திய அணி தரப்பில் 4 ஓவர்கள் பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 15 ரன்களுக்கு 3 விக்கெட்களும், முகமது ஷமி 3 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்களுக்கு 3 விக்கெட்களும் எடுத்து அசத்தினர். பும்ரா 2 விக்கெட்களும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க இருக்கிறது..

Published by:Arun
First published:

Tags: India, Scotland, T20 World Cup