• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பையில் ஜாக்பாட் பரிசுத்தொகை: ஐபிஎல் நடைமுறையை கடைப்பிடிக்கும் ஐசிசி

டி20 உலகக்கோப்பையில் ஜாக்பாட் பரிசுத்தொகை: ஐபிஎல் நடைமுறையை கடைப்பிடிக்கும் ஐசிசி

டி20 உலகக் கோப்பை 2021

டி20 உலகக் கோப்பை 2021

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2-வது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதே போல் இன்னிங்சில் ஐபிஎல் போலவே இடைவேளை உண்டு, அதாவது 2:30 நிமிடங்கள் இடைவேளை அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2-வது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதே போல் இன்னிங்சில் ஐபிஎல் போலவே இடைவேளை உண்டு, அதாவது 2:30 நிமிடங்கள் இடைவேளை அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 56 லட்சம் டாலர்கள் அதாவது ரூ.42கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஐசிசி. இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12கோடி. 2வது இடம் பெறும் அணிக்கு 6 கோடி.

    நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடக்கும் அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா 3 கோடி பரிசு வழங்கப்படும். அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்து வெறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் டாலர்கள்(ரூ.52 லட்சம்) பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 40ஆயிரம் டாலர்கள்(ரூ.30 லட்சம்) பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும்.

    அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்து வெறும் 8 அணிகளுக்கு தலா ரூ.52 லட்சம் பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசாக வழங்கப்படும். கடந்த 2016ம் ஆண்டைப் போல் சூப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும்.

    போட்டி நடக்கும்போது இடைவெளி விடுதலுக்கு நேரத்தை ஐசிசி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு இன்னிங்ஸ் நடுப்பகுதியிலும் 2.30 நிமிடங்கள் இடைவெளிவிடப்படும்.

    Also Read: IPL playoff CSK vs DC| ரபாடா 4 ஓவர் போடாதது ஏன்?- ஆவேஷ் கான் திடீரென புல்டாஸ் பவுலரானது எப்படி?கடைசி ஓவரை டாம் கரன் வீசியது ஏன்?-எஞ்சும் கேள்விகள்

    சாம்பியன் பரிசுத் தொகையான ரூ.12 கோடியை அள்ளும் அணி போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் உள்ளன. யாருக்கு லக்கி பிரைஸ் என்பது உலகக்கோப்பை தொடங்கி சில போட்டிகள் நடைபெற்ற பிறகுதான் தெரியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: