ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மீண்டெழுமா? இந்திய அணியின் பலம், பலவீனம் என்ன?

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மீண்டெழுமா? இந்திய அணியின் பலம், பலவீனம் என்ன?

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி மீண்டெழுமா என்பது இந்திய ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டி20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. 12 நாடுகள் பங்கேற்கும் சூப்பர் 12 சுற்றுகள் நடைபெற்றுவருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் பிரிவு ஏ, பிரிவு பி என்று பிரிக்கப்பட்டு இரண்டு பிரிவுகளிலும் தலா 6 அணிகள் என்று பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்திய அணி இடம்பெற்ற பிரிவு-பியில் பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளைத் தவிர மற்ற 3 மூன்று அணிகளும் சிறிய அணிகள் என்பதால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் கருதியிருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இரு போட்டிகளிலும் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிக மோசமாக அமைந்தது. நாங்கள் தைரியமாக எதிரணியை எதிர்கொள்ளவில்லை என்று கேப்டன் கோலி விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆட்டம் மோசமாக இருந்தது. கிட்டதட்ட இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது.

இருப்பினும், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் மிகப்பெரும் வெற்றியடைந்து, மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தால் இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும். எனவே, இந்திய ரசிகர்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் சிறிய அணியாக இருந்தாலும் பந்துவீச்சின் போது பவர் பிளேவில் முஜிபுர் ரகுமான், முகமது நபி ஜோடியும், மிடில் ஓவர்களில் ரஷித் கானும் எதிரணியினருக்கு கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். பேட்டிங்கில் ஷஷாய், ஷாஷாத் ஜோடி ஆப்கானுக்கு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து வருகிறது. ஆப்கானிஸ்தானை இந்திய அணி எளிதாக எடை போட முடியாது. ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று கூடுதலான நெட் ரன் ரேட்டைக் கொண்டுள்ளது.

அதனால், ஆப்கானிஸ்தானை வெற்றி பெறவேண்டியது மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங்கில் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை இரண்டுமே மிக மோசமாக உள்ளது. டி20 போட்டிகளில் மிகச் சிறந்த தொடக்கத்தைக் கொடுக்கும் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இரண்டு பேருமே தடுமாற்றத்துடனே விளையாடுகின்றனர். பந்துவீச்சிலும், பும்ரா மட்டுமே ஓரளவு ரன்களைக் கட்டுப்படுத்துகிறார்.

மூத்த வீரரான அஸ்வினுக்கு ஏன் ஓவர் கொடுக்கப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் இன்று அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்படுமா என்பதும், அவருடைய வருகை அணிக்கு பலமாக அமையுமா என்பதும் போட்டியின்போதே தெரியும்.

First published:

Tags: India, T20 World Cup