• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Eng vs NZ | நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

Eng vs NZ | நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது அபுதாபி மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    சூப்பர் 12 சுற்றின் போது இங்கிலாந்து குரூப் 1 இல் இடம்பெற்றிருந்தது. இயான் மோர்கன் தலைமையிலான அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி, 4ல் வெற்றி, 1ல் தோல்வியடைந்தது. நியூசிலாந்தைப் பொறுத்தளவில், குரூப் 2-ல் இருந்தது. சூப்பர் 12 சுற்றின் போது 5 போட்டிகளில் விளையாடி 4 ஆட்டங்களில் வெற்றி, 1 தோல்வியடைந்தது.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இதுவரை 21 டி20 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் 13 போட்டிகளில் இங்கிலாந்தும், 7 போட்டிகளில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு எட்டப்படவில்லை. ஐசிசி 20 ஓவர் உலக கோப்பை தொடர்களில், 5 போட்டிகளில் இரு அணிகளும் சந்தித்துள்ளன. அதில் 3 முறை இங்கிலாந்தும், 2 முறை நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

    நியூசிலாந்து அணி : மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன்(கேப்டன்), டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்

    இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், மொயின் அலி, ஈயோன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வூட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: