ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Pak vs Eng: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆப்பு வைக்கும் கனமழை.! மெல்போர்னில் மிரட்டும் வானிலை.. ஐசிசி சொல்வது என்ன?

Pak vs Eng: உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு ஆப்பு வைக்கும் கனமழை.! மெல்போர்னில் மிரட்டும் வானிலை.. ஐசிசி சொல்வது என்ன?

கிரிக்கெட்

கிரிக்கெட்

T20 World Cup 2022 Final : உலகக் கோப்பை போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தாலும் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது மழை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மெல்போர்னில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுள்ளன.

  2009ம் ஆண்டு பாகிஸ்தானும், 2010ம் ஆண்டு இங்கிலாந்தும் சாம்பியன் பட்டத்தை ஏற்கனவே ருசித்துள்ளன. அதே போல் 2007-ல் பாகிஸ்தானும், 2016-ல் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளன. இறுதியாட்டத்தில் வெற்றி தோல்வியை சமவிகிதத்தில் அனுபவித்துள்ள இந்த இரண்டு அணிகள் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மல்லுகட்டவுள்ளனர். 50 ஓவர் உலகக் கோப்பையை கைவசம் வைத்துள்ள இங்கிலாந்து அணி, டி 20 உலகக் கோப்பையும் வென்று ஒரே நேரத்தில் இரண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது.

  இப்படி போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தாலும் அனைவரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது மழை. இறுதி போட்டியில் வானிலை பெரும் பிரச்னையாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மெல்போர்னில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று வீரர்கள் மைதானத்தில் களமிறங்கும் முன்னே வானில் இருந்து மழை இறங்கிவிடும் என கணிக்கப்படுகிறது.மழையால் இறுதி போட்டி ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் டே வசதியை ஐசிசி அறிவித்துள்ளது.

  அதாவது ஞாயிறு நடக்கும் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் திங்கட்கிழமை போட்டி நடத்தப்படும். அப்போழுதும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும். இதனால் உலகக்கோப்பை போட்டி இன்று நடக்குமா அல்லது நாளை நடக்குமா எனவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Pakistan cricket, T20 World Cup