• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Eng vs Ban | வங்கதேசத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய இங்கிலாந்து

Eng vs Ban | வங்கதேசத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய இங்கிலாந்து

Eng vs Ban

Eng vs Ban

டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி இங்கிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 குரூப் 1 சுற்றில் உள்ள இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதின். அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், முகமது நயிம் களமிறங்கினார்கள். தொடக்க வீரர்கள் இருவரையும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி அவுட்டாக்கினார். அடுத்த வந்த ஷகிப் அல் ஹசன் 4 ரன்கள் எடுத்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

    வங்கதேச அணி வீரர்களை ரன் எடுக்க விடாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் அதிகப்ட்சமாக 29 ரன்கள் சேர்த்தார்.

    125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க வீரர் ஜோசன் ராய் அதிரடியால் இங்கிலாந்து அணி 14.1 ஒவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்று குரூப் 1 பிரிவில் டாப்பில் உள்ளது. அதே சமயம் வங்கதேச அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: