• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மொயின் அலி சிறப்பான ஆட்டம்: 166 ரன்கள் குவித்த இங்கிலாந்து

மொயின் அலி சிறப்பான ஆட்டம்: 166 ரன்கள் குவித்த இங்கிலாந்து

மொயின் அலி

மொயின் அலி

நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது அபுதாபி மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதனையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மில்னே பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் மாலன் களமிறங்கினார். மறுபுறம் பட்லர் 29 ரன்கள் எடுத்திருந்தநிலையில் இஷ் சுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, மொயின் அலி களமிறங்கினார். மாலன், மொயின் அலி இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக ஆடிய டேவிட் மாலன் 30 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌத்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய மொயின் அலி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: