ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வாய் சொல் வீரனல்ல.. சொன்னதை செய்து காட்டிய ஜோஸ் பட்லர்

வாய் சொல் வீரனல்ல.. சொன்னதை செய்து காட்டிய ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர்

T20 World Cup | இந்தியா - பாகிஸ்தான் ஃபைனலில் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. நிச்சயமாக இதை நடக்கவிடாமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்வோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் நேற்று சொன்னதை இன்று நடத்தி காட்டிவிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டி20 தொடரில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி வந்த பாகிஸ்தான் தனது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை அசால்டாக வீழ்த்தி ஃபைனலில் காலடி எடுத்து வந்தது. பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதால் இந்தியா ஃபைனல் செல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்திடம் இந்தியா மண்டியிட்டதை ரசிகர்களால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.

முதல் கோணம் முற்றிலும் கோணம் என்பது போல் பவர் ப்ளேயில் இந்திய வீரர்கள் விக்கெட்டை தாரை வார்த்தது பெரும் பின்னடைவாக இருந்தது. உலகக்கோப்பை தொடர் என்பதையே கே.எல்.ராகுல் மறந்துவிட்டார் என்பது போல் தான் இருந்தது இந்த இன்னிங்ஸ். கே.எல்.ராகுலுக்காக இங்கிலாந்து பெரிய மெனக்கெடல் எல்லாம் எடுக்கவில்லை. கொஞ்சம் பவுன்சர் போட்டதும் பந்தை பேட்டில் தடவிக்கொடுத்து விக்கெட்டை இழந்தார். கொஞ்சம் இறங்கி வந்த பவுண்டரிகள் விளாசிய கேப்டன் ரோஹித் 28 பந்துகளுக்கு 27 என நடையைக் கட்டினார். கோலி, ஹர்திக் பாண்ட்யா கொஞ்சம் ஆறுதல் கொடுத்ததால் இந்தியா 168 வந்தது. ஹர்திக் பேட்டை சுழற்றவில்லை என்றால் இதுவும் வந்திருக்காது.

Also Read : இந்தியாதான் ஜெயிக்கணும்.. ஃபைனல்ல பாக்கணும் - ஆசையைச் சொன்ன பாகிஸ்தானின் வைரல் ரசிகை!

இந்தியாவின் பந்துவீச்சு இங்கிலாந்தை கொஞ்சம் கூட அச்சுறுத்தவில்லை. பவர்ப்ளே ஓவர்களிலே இங்கிலாந்து ஓபனர்கள் பட்லர், அலெக்ஸ் ஹோலெஸ் செட்டில் ஆகிவிட்டனர். யார் போட்டாலும் விளாசல் தான் என்பது போன்று தான் அவர்கள் உடல் மொழியே இருந்தது. அலட்டிக்கொள்ளாமல் ரன்களை சேர்த்தனர். ஒரு விக்கெட்டாவது எடுங்கப்பா என இந்திய ரசிகர்கள் கெஞ்சாத குறைதான். 14 ஓவரில் முகமது ஷமி பந்தில் பட்லர் ஸ்ட்ரைடில் 100 மீட்டரில் அடித்த சிக்ஸர்கள் இந்திய ரசிகர்களின் இதயத்தையே நொறுக்கியது.

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனலில் மோதுவதை பார்க்க விரும்பவில்லை. நிச்சயமாக இதை நடக்கவிடாமல் இருக்க எங்களால் முடிந்ததை செய்வோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் நேற்று சொன்னதை இன்று நடத்தி காட்டிவிட்டார். இந்தியாவை 168 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அதனை 16 ஓவரிலே விக்கெட் இழப்பின்றி விரட்டி பிடித்துவிட்டார் பட்லர். அடிலெய்டில் இந்த அரையிறுதிப்போட்டிக்கு முன்னர் நடந்த 11, டி20 சர்வதேச போட்டியில் டாஸ் வென்ற அணி போட்டியை வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றையும் உடைத்துள்ளார் பட்லர்.

Published by:Ramprasath H
First published:

Tags: T20 World Cup