• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஜாஸ் பட்லர் சூறாவளி ஆட்டம்: இலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி

ஜாஸ் பட்லர் சூறாவளி ஆட்டம்: இலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    உலக நாடுகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. 12 அணிகள் போட்டியிடும் சூப்பர் 12 சுற்று நடைபெற்றுவருகிறது. இன்றைய போட்டியில் இலங்கை அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேசன் ராயும், ஜாஸ் பட்லரும் களமிறங்கினர். ஜேசன் ராய் 9 ரன்னில் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மாலனும் 6 ரன் எடுத்திருந்த நிலையில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஃபேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 35 ரன்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறினாலும் ஜாஸ் பட்லர் மறுபுறம் அரணாக நின்றார். ஃபேர்ஸ்டோவைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஓயன் மோர்கன் ஜாஸ் பட்லருக்கு பார்டனர்ஷிப் கொடுத்தார்.

    மறுபுறம் ஜாஸ்பட்லர் எதிரணியின் பந்துவீச்சை நாலாப்புறம் சிதறடித்தார். அவர், 67 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். மறுபுறம் கேப்டன் ஓயன் மோர்கன் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தார். அதனையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஸங்கா, குஷல் பெரிரா ஆகியோர் களமிறங்கினர். நிஸங்கா 1 ரன்னிலும், பெரீரா 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

    அசலங்கா 21 ரன்களிலும் பெர்னாண்டோ 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பானுகா ராஜபக்ச, தசன் ஷானகா தலா 26 ரன்கள் எடுத்தனர். வினானிட்டு ஹசரங்கா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். 19 ஓவர் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: