• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பையில் முதல்முறையாக அறிமுகமாகும் நடைமுறை

டி20 உலகக்கோப்பையில் முதல்முறையாக அறிமுகமாகும் நடைமுறை

ICC T20 உலகக்கோப்பை

ICC T20 உலகக்கோப்பை

டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் டிஆர்எஸ் ரிவியூஸ் முறை முதல்முறையாகச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இம்மாதம் 17ம் தேதிதொடங்கி நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. இந்தப் போட்டித் தொடரில், டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்த ஐசிசி முறைப்படி அனுமதி அளித்துவிட்டதையடுத்து, இந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது.

    ஒவ்வொரு அணிக்கும் இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் உண்டு. அதாவது இருமுறை களத்தில் கொடுக்கும் அவுட் தீர்ப்பை, அல்லது நாட் அவுட் தீர்ப்பை 3வது நடுவர் அல்லது டிவி நடுவரிடம் மேல்முறையீடு செய்து ரிவியூ செய்ய அனுமதி உண்டு.

    இதற்குமுன் கடந்த 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் டிஆர்எஸ் முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. டிஆர்எஸ் முறை முதன்முதலாக கரிபீயனில்நடந்த மகளிர் டி20 போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின் 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்தப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் ஐசிசி வெளியிட்ட அறிக்கையின்படி, கிரிக்கெட்டின் அனைத்துப் போட்டிகளிலும் கூடுதலாக ஒருடிஆர்எஸ் ரிவியூ சேர்க்க அனுமதிக்கலாம். அனுபவம் குறைந்த நடுவர்கள், அதிகமான வேலைப் பளு மற்றும் தவறு மனித இயற்கை என்பதன் காரணமாக சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வர நேரலாம் என்பதால், டிஆர்எஸ் ரிவியூ கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.

    ஆதலால்,இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு இன்னிங்ஸுக்கு 2 டிஆர்எஸ் ரிவியூ வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் 3 ரிவியூகளும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்2 ரிவியூகளும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

    Also Read: டி20 உலகக்கோப்பையில் ஜாக்பாட் பரிசுத்தொகை: ஐபிஎல் நடைமுறையை கடைப்பிடிக்கும் ஐசிசி


     Also Read: ரெய்னாவை உட்கார வைத்து உத்தப்பாவுக்கு ஆதரவு- தோனியை பாராட்டும் கம்பீர்


     Also Read: ஐபிஎல் 2021: ரசிகர்களுக்கு ரோகித் சர்மாவின் உருக்கமான ‘மெசேஜ்’

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: