ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியா vs பாகிஸ்தான் கனவை தகர்க்குமா இங்கிலாந்து? அரையிறுதியில் இன்று மோதல்

இந்தியா vs பாகிஸ்தான் கனவை தகர்க்குமா இங்கிலாந்து? அரையிறுதியில் இன்று மோதல்

இந்தியா - இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, Indiaaustralia

  நேற்றைய அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடவேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ள நிலையில், இன்று நடைபெறும் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி அடிலெய்ட்டில் இன்று நடைபெறுகிறது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ள குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும், இதனால் இந்த போட்டியில் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போழுதும் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணியை விட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் அந்த அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு அது மிகவும் பலவீனமாக இருக்கும்.

  இதையும் படிங்க: கோலியின் மற்றொரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

  இந்தியா அணிக்கு அடிலெய்ட் மைதானம் என்பது நமது சொந்த மைதானம் போல குறிப்பாக விராட் கோலி இந்த மைதானத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார்.

  இதில் அவர் 907 ரன்களை அடித்திருக்கிறார்.  5 சதங்களும் இதில் அடங்கும். மேலும் கடைசியாக சூப்பர் -12 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அதனை நிரூபித்தும் இருக்கிறார்.

  நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது குறித்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் கூறும்போது, இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதை நாங்கள் விரும்பவில்லை.  இது நடக்காமல் இருக்க எங்களால் முடிந்த அளவு முயற்சிப்போம” என்று கூறியிருந்தார். எனவே, இன்றைய ஆட்டத்தை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும்  காத்திருக்கின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Cricket, India, T20 World Cup