முகப்பு /செய்தி /விளையாட்டு / பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை

வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன்

வெற்றிக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன்

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி தொடர்ந்து 3ஆவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்த முறையிலான போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி மட்டுமே கோப்பையை கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டு வந்தது. இதன் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது. கேப்டன் அஜய் குமார்50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் கால்பந்தாட்ட நட்சத்திரம் நெய்மர்… இன்ஸ்டா பதிவு வைரல்

சுனில் ரமேஷ் 63 பந்துகளில் 136 ரன்கள் குவித்தார். இதையடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது.

தந்தையை மிஞ்சிய மகன்.. அறிமுக போட்டியில் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் அர்ஜூன் அசத்தல்

அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு மொத்தமே 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த முறையும் சாம்பியன் கோப்பையை வென்றது. ஹாட்ரிக்காக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

First published:

Tags: Cricket