• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக் கோப்பைத் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து- நியூ கினியாவை வீழ்த்திய ஓமன்

டி20 உலகக் கோப்பைத் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து- நியூ கினியாவை வீழ்த்திய ஓமன்

ஸ்காட்லாந்து வீரர்கள்

ஸ்காட்லாந்து வீரர்கள்

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், பப்புவா நியூ கினியாவை ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை ஸ்காட்லாந்து அணி வீழ்த்தியுள்ளது.

  • Share this:
    சூப்பர் 12 சுற்றுக்கு ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு இடங்களுக்கான முதல் சுற்று போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மஸ்கட்டில் நடைபெற்ற முதல் போட்டியில், ஓமன் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஓமன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஓமன் அணியில், தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடினர். 13.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 131 ரன்களை சேர்த்து ஓமன் அணி அபார வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் வங்கதேசம் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின.

    டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய வங்கதேச வீரர்கள் தொடக்க முதலே ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர். ஷகிப் அல் ஹசன் 20 ரன்களும், முஸ்திஃபிகுர் ரஹீம் 38 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் வலுவான வங்கதேச அணியை புதிய ஸ்காட்லாந்து அணி வீழ்த்தி முதல்போட்டியிலேயே அசத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: