• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup | ‘நாகின் டான்ஸ்’அணிக்கு குடைச்சலைக் கொடுத்த ஓமான் அணி- வங்கதேசம் போராடி வெற்றி

T20 Worldcup | ‘நாகின் டான்ஸ்’அணிக்கு குடைச்சலைக் கொடுத்த ஓமான் அணி- வங்கதேசம் போராடி வெற்றி

வங்கதேசத்துக்கு குடைச்சலைக் கொடுத்த ஜதிந்தர் சிங்.

வங்கதேசத்துக்கு குடைச்சலைக் கொடுத்த ஜதிந்தர் சிங்.

ஓமான், அல் அமீராட்டில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஓமான் அணியை போராடி வீழ்த்தி வங்கதேச அணி புள்ளிகள் கணக்கைத் தொடங்கியது. குரூப் பியில் ஸ்காட்லாந்திடம் அன்று தோற்ற பிறகே வங்கதேச அணி நேற்று வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது.

  • Share this:
    குரூப் பி-யில் ஸ்காட்லாந்து 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, ஓமான் 2 புள்ளிகள் மற்றும் 0.613என்ற நிகர ரன் விகிதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. பங்களாதேஷ் 0.500 என்ற ரன் விகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது, டாப்2 பினிஷ்கள் கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்நிலையில் நேற்று போராடி 26 ரன்களில் வென்றது வங்கதேசம்.

    ஓமான் அணியில் ஜதீந்தர் சிங் (41) கிரீசில் இருந்த வரைக்கும் ஒமான் அணி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது, இவரை 13வது ஓவரில் வங்கதேசம் அவுட் ஆக்கியவுடன் தான் 90/3 என்ற நிலையிலிருந்து ஓமான் தோல்வி கண்டது. முன்னதாக வங்கதேசம் 153 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. ஓமான் அணியில் பிலால் கான், பியாஸ் பட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த கலீமுல்லா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

    தொடர்ந்து ஆடிய ஓமான் அணி 11வது ஓவர் வரை 81/2 என்று பிரமாதமாகச் சென்றது. ஆனால் முஸ்தபிசுர் கட் ஸ்விங் பவுலிங்கும், ஷாகிப் அல் ஹசன் ஸ்பின்னும் சேர்ந்து முடக்க 127 ரன்களுக்கு கட்டுப்பட்டு தோல்வி தழுவியது. முஸ்தபிசுர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வங்கதேச அணியில் முகமது சைபுதீன் 4 ஓவர் 16 ரன்களையே விட்டுக் கொடுத்தார். மெஹதி ஹசன் இன்னும் சிக்கனம் 4 ஓவர் 14 ரன்கள்தான். ஷாகிப் அல் ஹசன் பேட்டிங்கில் 29 பந்துகளில் 40 விளாசி பிறகு பவுலிங்கிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி நாயகனாக ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன்


    வங்கதேச அணி பேட்டிங்கில் முகமது நயீம் 64 ரன்கள் எடுத்து கடைசி 5 ஓவர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுத்தார். ஆனால் வங்கதேசம் சரியாக ஆடவில்லை. 14வது ஓவரில் 101/2 என்று இருந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஓமான் அணியில் ஜதீந்தர் சிங் 33 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்து விரட்டலில் வங்கதேசத்துக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தார். அப்போதுதான் மெஹதி ஹசன் மிராஸ் தன் ஆஃப் ஸ்பின் கலையை ஓமான் மீது ஏவி விட ரன்கள் முடங்கின, முஸ்தபிசுர் ரஹ்மான் புகுந்தார். 7 வது ஓவரில் ஓமான் அணி 57/2 என்று இருந்த போது வங்கதேச வீரர்கள் முகத்தில் ஈயாடவில்லை. அப்போதுதான் மெஹதி ஹசன் மிகவும் டைட்டாக 2 ஓவர்களை வீசி ஜதீந்தரை கட்டுப்படுத்தினார். மெஹதி இல்லையெனில் வங்கதேச பவுலிங் மோசம்தான்.

    ஜதீந்தர் சிங் அருமையாக ஆடினார். ஷாகிப் பந்தை சுவிட்ச் ஹிட் பவுண்டரி அடித்தார், பிறகு இன்சைடு அவுட் சிக்ஸ். புல் ஷாட்டிலும் இவர் வல்லவர். இவர் விக்கெட்டை ஷாகிப் அல் ஹசன் வீழ்த்தினார், ஆனால் இவர் அடித்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட் ஸ்கொயர்லெக்கில் பவுண்டரியை நோக்கிச் சென்றது ஆனால் அங்கு லிட்டன் தாஸ் கைக்குச் சென்று ஆட்டமிழந்தார், இந்த விக்கெட் வங்கதேச வெற்றிக்கு கதவுகளைத் திறந்து விட்டது. 90/3 என்ற ஸ்கோரிலிருந்து 37 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியது ஓமான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: