ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Aus vs Ire | டக்கரின் அதிரடி வீண்.. அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

Aus vs Ire | டக்கரின் அதிரடி வீண்.. அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

அயர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதின. பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. ஆனால் கேப்டன் பின்ச் மட்டும் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் கரேத் டெலானி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

    180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அந்த அணியின் விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் அயர்லாந்து அணி 18.1 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    Also Read : 18வது ஓவரை அஷ்வினுக்கு வழங்க ரோஹித் எடுத்த முடிவு சரியா? இந்திய பவுலர் என்ன சொன்னார் தெரியுமா?

    இந்த வெற்றியை அடுத்து குரூப் 1 பிரிவில் 5 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.

    Published by:Vijay R
    First published:

    Tags: Australia, T20 World Cup