• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வார்னர் அதிரடி: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

வார்னர் அதிரடி: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

இலங்கை அணிக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 அணிகள் மோதும் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத்தேர்வு செய்தது. அதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குஷல் பெரிரா களமிறங்கினர். அதில், நிசாங்கா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அசலங்கா களமிறங்கினார். அசலங்கா, பெரிரா இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது.

    இருவரும் நிதானமான ஆடிய நிலையில், அசலங்கா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரிராவும் 35 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராஜபக்ச 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

    அதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். ஐ.பி.எல் ஆட வாய்ப்பில்லாமல் தவித டேவிட் வார்னர், இந்தப் போட்டியில் பழைய ஃபார்முக்கு வந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறம், ஃபின்ச்சும் அதிரடியாக ஆடினார். 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்துவீச்சில் பின்ச் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஷானகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். ஸ்மிதும், ஸ்டாய்னிஸும் 17 ஓவரில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 17 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: