ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உங்க பாச்சா பலிக்காது: பாகிஸ்தானுக்கு ஆமிர் எச்சரிக்கை

T20 World Cup | ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உங்க பாச்சா பலிக்காது: பாகிஸ்தானுக்கு ஆமிர் எச்சரிக்கை

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை, ஆஸ்திரேலியா அதை அனுமதிக்காது. முதல் பந்திலிருந்தே பாகிஸ்தான் அட்டாக்கிங் பேட்டிங் செய்ய வேண்டும்.

 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் உங்களால் கடைசி 4 ஓவர்களில் 40 ரன்களை அடிக்க முடியாது, அவர்கள் விடமாட்டார்கள் என்று பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் எச்சரித்துள்ளார்.

  டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வரும் வியாழனன்று பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது, பாகிஸ்தான் அஞ்சுக்கு அஞ்சு வெற்றியுடன் டாப்-ல் உள்ளது, ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் வென்றுள்ளது. இது மீட்டெழுச்சிபெற்ற ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், ஏரோன் பிஞ்ச் பார்மில் இருக்கின்றனர், பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், ஜாம்ப்பா அபாயகரமாக வீசுகின்றனர்.

  நமீபியாவுக்கு எதிராக நேற்று பவர் ப்ளேயை சரியாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிறார் முகமது ஆமிர். “துபாய், அபுதாபியில் 160 ரன்களை எடுக்க வேண்டும், அதற்கு பவர் ப்ளேயை நன்றாக பயன்படுத்த வேண்டும். நமீபியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, இத்தனைக்கும் நமீபியாவில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் யாரும் இல்லை. பவர் ப்ளேயை சரியாகப் பயன்படுத்தாமல் முடிவு ஓவர்களில் அடித்து ஆடினர்.

  கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை எடுக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு வாய்ப்பில்லை, ஆஸ்திரேலியா அதை அனுமதிக்காது. முதல் பந்திலிருந்தே பாகிஸ்தான் அட்டாக்கிங் பேட்டிங் செய்ய வேண்டும். பெரிய அணிகளுக்கு எதிராக விக்கெட் கொடுக்காமல் நின்றால் போதும் என்று ஆரம்பத்தில் விட்டு விட்டால் பின்னால் நாம் அடித்து ஆட அவர்கள் விடமாட்டார்கள். பவர் ப்ளேயில் 35-40 ரன்களை எடுக்க வேண்டும் அப்போதுதான் 160க்கும் கூடுதலாக ரன்களைச் சேர்த்து வலுவான இலக்கை அமைக்க முடியும்.

  பாகிஸ்தானுக்கு உண்மையான சோதனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிதான். குரூப் ஸ்டேஜில் இந்தியா மட்டுமே பாகிஸ்தானுக்கு கொடுத்திருந்தால் கடினமான போட்டியை கொடுத்திருக்கும் ஆனால் அது இல்லாத பட்சத்தில் இப்போது ஆஸ்திரேலியாதான் பாகிஸ்தானுக்கு கடினமான அணி.

  ஆஸ்திரேலியா நல்ல கிரிக்கெட்டை ஆடி வருகின்றனர், அவர்களை வீழ்த்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடினால்தான் உண்டு. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 160 ரன்களை ஆஸ்திரேலியா 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது ஜோக் அல்ல. அவர்கள் நல்ல ரிதமில் இருப்பதையே அந்த சேஸிங் காட்டுகிறது” என்றார் முகமது ஆமிர்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: T20 World Cup