• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Pak vs Aus| கேட்சைத் தவற விட்டதுடன் பாகிஸ்தான் அணி சறுக்கிய இடங்கள்- தோல்வி ஏன்?

Pak vs Aus| கேட்சைத் தவற விட்டதுடன் பாகிஸ்தான் அணி சறுக்கிய இடங்கள்- தோல்வி ஏன்?

பாகிஸ்தான் சறுக்கிய இடங்கள். டி20 உலகக்கோப்பை 2021 அரையிறுதி

பாகிஸ்தான் சறுக்கிய இடங்கள். டி20 உலகக்கோப்பை 2021 அரையிறுதி

பகர் ஜமான் இறங்கிய பிறகு ஏகப்பட்ட பந்துகளை விரயம் செய்தார், அவர் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாததால் பிரமாதமாக ஆடிய ரிஸ்வானின் ரிதமும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆடம் ஜாம்ப்பா 4 ஓவர் 22 ரன்கள் என்று தப்பி விட்டார்.

  • Share this:
    துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சறுக்கிய இடங்கள் நுட்பமானது, அதை அந்த அணி சரி செய்யவில்லை இதை ஆஸ்திரேலியா பயன்படுத்திக் கொண்டு அபார வெற்றி பெற்றது.

    ஹசன் அலியை எளிதில் பலிகடாவாக்கி அவர் விட்ட கேட்ச்தான் தோல்விக்குக் காரணம் என்று அவரை கேலி, கிண்டல், ட்ரால் செய்யலாம், ஆனால் பாகிஸ்தான் சறுக்கல் தொடக்க பேட்டிங்கில்தான் இருந்தது என்பது பலரும் அறியாதது. ஆனால் விக்கெட்டுகள் அவ்வளவாக விழாத போது 10 ஓவர்களில் 71 ரன்கள் என்பது போதவே போதாது.

    பகர் ஜமான் இறங்கிய பிறகு ஏகப்பட்ட பந்துகளை விரயம் செய்தார், அவர் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாததால் பிரமாதமாக ஆடிய ரிஸ்வானின் ரிதமும் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆடம் ஜாம்ப்பா 4 ஓவர் 22 ரன்கள் என்று தப்பி விட்டார். ஜாம்ப்பா பிரமாதமான லெந்தில் வீசினார் என்பது வேறு விஷயம், அந்த சமயத்தில் பகர் ஜமான் அடித்தால் சிக்ஸ் இல்லையேல் டாட் பால் என்று ஆடியதில் சிங்கிள்கள் வரவில்லை பகர் ஜமான் உண்மையில் இறங்கியவுடன் சிங்கிள் எடுத்து பார்மில் இருக்கும் ரிஸ்வானுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து அவரை அடித்து ஆடச்செய்திருக்க வேண்டும்.

    ஒருநாள் போட்டிகளில் வேண்டுமானால் தொடக்க வீரர் ஒருவர் செட்டில் ஆகி கடைசி வரை ஆடட்டும் பிறகு இறங்கும் வீரர்கள் அடித்து ஆடலாம் என்ற உத்தியைக் கடைப்பிடிக்கலாம் ஆனால் டி20-யில் பார்மில் இருக்கும் வீரர் ரிஸ்க் எடுத்து அடித்து ஆட புதிதாக களமிறங்கும் வீரர்கள் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதோடு இவர்களும் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடிக்க வேண்டும், அது நேற்று பாகிஸ்தான் அணியில் இல்லாததே 180-190 பிட்சில் 176 ரன்களில் முடிந்தனர், அதுவும் பகர் ஜமானுக்கு பின்னால் பந்துகள் மட்டையில் சிக்க 4 சிக்சர்களை விளாசி 32பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார், இது பெரிய இன்னிங்ஸ் போல் தெரியும் ஆனால் அவர் இறங்கியவுடன் நிறைய பந்துகளை விரயம் செய்தார் என்பதுதான் உண்மை.

    கிளென் மேக்ஸ்வெல் வீசிய போது பாபர் அசாம் பவுண்டரி அடிக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க் 13வது ஓவரில் 3 ரன்களையும், ஆடம் ஜாம்ப்பா 16வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தனர். 19வது ஓவரையும் கமின்ஸ் அபாரமாக வீசி 3 ரன்களை மட்டுமே கொடுத்து ஆசிப் அலி விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசி ஸ்டார்க் ஓவரில் இரண்டு அபாரமான சிக்சர்களை பகர் ஜமான் அடித்ததால் இந்த ஸ்கோர் வந்தது, ஆனால் போதாமல் போனது.

    அதே போல் வார்னர் பேட்டிங் பார்மை குறைத்து எடைப் போட்டது பாகிஸ்தான் அதனால் அவர் 30 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். 3 சிக்சர்கள் அதில் அடங்கும். ஷதாப் கான் பிரமாதமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு கடிஅசி 5 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில் 5 விக்கெட்டுகள் மட்டுமே கையில் இருந்த்து, பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலைதான்.

    அப்போது ஹசன் அலி 16வது ஓவரில் 12 ரன்களையும் 18வது ஓவரில் 15 ரன்களையும் கொடுத்ததோடு ஷாகின் அப்ரீடி வீசிய 19வது ஓவரில் வேடுக்கு கேட்சை விட்டார், அதன் பிறகு 3 அற்புத சிக்சர்களில் அந்த ஓவரிலேயே மேட்ச் முடிந்தது. ஹசன் அலிக்குப் பதில் ஹாரிஸ் ராவுஃபுக்கு ஓவரை கொடுத்திருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் வென்றிருக்கலாம், ஆனால் பாபர் ஆசம் இந்தத் தவறை செய்தார். ஹசன் அலியை நம்பி மோசம் போனார். இமாத் வாசிமும் 3 ஓவர்கள்தான் வீசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: