முகப்பு /செய்தி /விளையாட்டு / ஏற்கெனவே இந்தியாவுடன் 5-0, இந்த முறையும் ஜீரோதான் - பாகிஸ்தானை முடிப்போம்- கவுதம் கம்பீர்

ஏற்கெனவே இந்தியாவுடன் 5-0, இந்த முறையும் ஜீரோதான் - பாகிஸ்தானை முடிப்போம்- கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

கவுதம் கம்பீர்

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 24ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன, இந்தப் போட்டி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 24ம் தேதி ரசிகர்களுக்கு விருந்தாக இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன, இந்தப் போட்டி குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தன் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

“பாகிஸ்தானுக்கு இந்த முறையும் கடும் நெருக்கடி ஏற்படும், ஏனெனில் உலகக்கோப்பைகளில் இந்தியா பாகிஸ்தானை 5 முறை வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான் ஒருமுறை கூட உலகக்கோப்பைகளில் இந்தியாவை வென்றதில்லை. இந்தியாவுக்கு அழுத்தம் அதிகம் என்று நாம் பேசக்கூடாது.

மாறாக பாகிஸ்தானுக்குத்தான் அதிக நெருக்கடி. ஏனெனில் பாகிஸ்தான் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இது அவர்களுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும்.

Also Read: தலைவர் பதவிக்கு டிராவிட் மட்டுமே விண்ணப்பம்: காலக்கெடுவை நீட்டித்த பிசிசிஐ

இப்போதைக்குப் பார்த்தால் இந்திய அணி பாகிஸ்தானை விட நிச்சயம் பலபடிகள் மேலே உள்ளது. ஆனால் டி20 கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும். அதனால் உத்தரவாதமாக நாம் எதையும் எடுத்துக் கொள்ள கூடாது. ஆப்கானிஸ்தான் அணி பெரிய பெரிய அதிர்ச்சிகளை அளிக்கலாம்.

அதே போல்தான் பாகிஸ்தான் அணியும்.

2007 டி20 உலகக்கோப்பையின் போது முதல் போட்டி ஸ்காட்லாந்துடன் தான், அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட, பாகிஸ்தானுடன் தான் முதல் போட்டியில் ஆடினோம். பாகிஸ்தானுடன் எப்போதும் ஒரு தொடரின் ஆரம்பத்தில் ஆடுவது நல்லது. ஏனெனில் பாகிஸ்தானுடன் போட்டி இருக்கிறது என்ற சிந்தனையுடனேயே நாம் அலைய வேண்டியதில்லை.

Also Read: ‘அது வேற வாய் இது நாற வாய்’- விராட் கோலியைத் தாக்கும் முன்னாள் வீரர்

முதலில் பாகிஸ்தானை முடித்து விட்டால், மற்ற போட்டிகளை எதிர்கொள்ள சவுகரியமாக இருக்கும். இரு நாடுகளும் ஆடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே. ” என்றார் கவுதம் கம்பீர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை அக்டோபர் 17ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி துபாயில் நவம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. குரூப் 2-ல் இந்தியா, ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து பிறகு தகுதி பெறும் 2 அணிகள் இடம்பெறும்.

First published:

Tags: Gautam Gambhir, ICC world cup, T20