• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பந்துவீச்சில் மிரட்டிய ரஷித்கான், முஜிப் உர் ரஹ்மான்: 60 ரன்களில் சுருண்ட ஸ்காட்லாந்து- ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

பந்துவீச்சில் மிரட்டிய ரஷித்கான், முஜிப் உர் ரஹ்மான்: 60 ரன்களில் சுருண்ட ஸ்காட்லாந்து- ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.

  • Share this:
    உலக அளவில் 12 நாடுகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. உலகக் கோப்பையின் சூப்பர் 12 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷஷாய், முகம்மது ஷாஷத் களமிறங்கினர்.

    இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் நிதானமான ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஷாஷத் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாப்பியான் ஷெரிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினார். ரஹ்மத்துல்லாவும், ஹஸ்ரத்துல்லாவும் இணைந்து நிதாமானக ரன்களைச் சேர்த்தனர். ஹஸ்ரத்துல்லா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய நஜிபுல்லா ஷாத்ரன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    குர்பாஸ் 46 ரன்களில் ஆட்டமிழக்க, நஜிபுல்லா தனது அதிரடியைத் தொடர்ந்தார். அதிரடியாக ஆடிய நஜிபுல்லா 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களைக் குவித்தார். ஆட்டநேர இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜார்ஜ் முன்சே, கெலே கோய்ட்ஷெர் களமிறங்கினர். முஜிப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் கோய்ட்ஷெர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய காலும் மேக்லியோட், ரிசி பெரிங்டான், மேத்யூ க்ராஸ், மைக்கல் லீஸ்க் என நான் வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சே மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். 10.2 ஓவரில் 60 ரன்களுக்கு ஸ்காட்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முஜிப் உர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளும், ரஷித்கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: