Home /News /sports /

நஜிபுல்லா அதிரடி: 190 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி

நஜிபுல்லா அதிரடி: 190 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஸ்காட்லாந்து எதிரானப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்துள்ளது.

    உலக அளவில் 12 நாடுகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. உலகக் கோப்பையின் சூப்பர் 12 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    அதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா ஷஷாய், முகம்மது ஷாஷத் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் நிதானமான ஆடி ரன்களைச் சேர்த்தனர். ஷாஷத் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாப்பியான் ஷெரிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ரஹ்மத்துல்லா குர்பாஸ் களமிறங்கினார். ரஹ்மத்துல்லாவும், ஹஸ்ரத்துல்லாவும் இணைந்து நிதாமானக ரன்களைச் சேர்த்தனர்.

    ஹஸ்ரத்துல்லா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய நஜிபுல்லா ஷாத்ரன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். குர்பாஸ் 46 ரன்களில் ஆட்டமிழக்க, நஜிபுல்லா தனது அதிரடியைத் தொடர்ந்தார். அதிரடியாக ஆடிய நஜிபுல்லா 34 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களைக் குவித்தார். ஆட்டநேர இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Afghanistan, T20 World Cup

    அடுத்த செய்தி