• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • IND vs AFG | இந்திய அணி பேட்டிங்... 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த விராட் கோலி

IND vs AFG | இந்திய அணி பேட்டிங்... 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த விராட் கோலி

இந்திய அணி

இந்திய அணி

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றையப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு வந்துள்ளார். அதேப் போன்று வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இந்திய அணியை பொறுத்தவரை முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து உள்ளதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இந்திய அணி இனி வரும் 3 போட்டிகளில் வெல்வது ஒரு புறம் இருந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியும் முக்கிய பங்காக உள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான வெற்றியை பொறுத்தே ஆப்கன் அணிக்கு அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது தெரிய வரும்.

    இந்திய அணி : கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: