• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தான் போட்டிக்கு முன் பிசிசிஐ அதிரடி முடிவு... 4 வீரர்கள் நாடு திரும்பினர்

பாகிஸ்தான் போட்டிக்கு முன் பிசிசிஐ அதிரடி முடிவு... 4 வீரர்கள் நாடு திரும்பினர்

இந்திய அணி

இந்திய அணி

டி20 உலகக் கோப்பை தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் 4 வீரர்களை இந்தியா அழைக்க பிசிசிஐ முடிவு செய்தது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியுள்ளது. இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வென்று உற்சாகத்துடன் உள்ளனது. முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால் இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடயே 4 வீரர்களை இந்தியாவிற்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

    ஐபிஎல் போட்டிக்கு பின் ஐக்கிய அமீரகத்தில் 8 நெட் பவுலர்களை பிசிசிஐ நிறுத்தி வைத்தது. அவர்களில் வெங்கடேஷ் ஐயர், கிருஷ்ணப்பா கவுதம், ஷதாப் நதீம் மற்றும் கரண் சர்மா ஆகியோர் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். அவேஷ் கான், லுகாமன் மரிவாலா, உம்ரான் மாலிக் மற்றுல் ஹர்ஷல் படேல் ஆகியோர் டி20 உலகக்கோப்பை முடியும் வரை நிரந்தர பவுலர்களாக இருப்பார்கள். இந்தியாவிற்கு அனுப்பப்படும் அனைத்து வீரர்களும் அடுத்த மாதம் தொடங்கும் சையது முஸ்டாக் அலி டிராபியில் தங்கள் மாநில அணிக்கு கிடைப்பார்கள்.

    Also Read : இந்திய அணியின் 11 வீரர்கள் இவர்கள் தான்! - விவிஎஸ் லக்ஷ்மன் கணிப்பு

    இந்தியா திரும்பிய நான்கு பந்து வீச்சாளர்களில் மூன்று பேர் சுழற்பந்து வீச்சாளர்கள். வெங்கடேஷ் ஐயர் ஒரு நடுத்தர வேகப்பந்து வீச்சாளர். ஐக்கிய அமீரகத்தில் நெட் பவுலிங்கில் நான்கு பந்து வீச்சாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான் ஆகியோரின் வேகம் இந்திய வீரர்களுக்கு நெட்ஸில் பயிற்சி செய்ய பயனுள்ளதாக உள்ளது. லுகமான் மரிவாலா மட்டுமே இடது கை பந்துவீச்சாளர். யுஏஇ ஆடுகளத்தில் ஹெர்ஷல் படேலின் மெதுவான பந்துவீச்சு பயனுள்ளதாக இருப்பதால் அவரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்) ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர். அஸ்வின், ஷர்துல் தாக்கூர், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: