• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Aus vs Pak | ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

Aus vs Pak | ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு... இரு அணிகளின் Playing XI

Aus vs Pak

Aus vs Pak

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைமால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பாகிஸ்தான் வலுவாக உள்ளதால் இறுதிபோட்டிக்கு முன்னேற முனைப்பில் உள்ளது. ஆஸ்திரேலியா சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 1 தோல்வி என்ற நிலையில் உள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது.

    இதுவரை 22 டி20போட்டிகளில் ஆஸ்திரேலியாவை சந்தித்துள்ள பாகிஸ்தான் 13 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா 9 முறை வென்றுள்ளது இன்று 10 ஆகுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஐசிசி டி20 உலகக்கோப்பைகளில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் 6 முறை மோதியுள்ளன, இதில் சம வெற்றியென்று இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளது.

    பாகிஸ்தான் அணி : முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கே்ப்டன்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, ஹாரிஸ் ரவூப், ஷஹீன் அப்ரிடி

    ஆஸ்திரேலியா அணி : டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: