ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Aus | இறுதி ஓவரின் 4 பந்துகளில் 4 விக்கெட்... ஷமியின் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா

Ind vs Aus | இறுதி ஓவரின் 4 பந்துகளில் 4 விக்கெட்... ஷமியின் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா

Ind vs Aus

Ind vs Aus

Ind vs Aus | தனது முழு அனுபவத்தையும் வெளிபடுத்திய ஷமி 4 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டேபார் 16-ம் தேதி தொடங்கியது. இதில் தற்போது சூப்பர் 12 போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நமீபியாவிடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனிடையே சூப்பர் 12 போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.

    இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சார்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர். ரோஹித் 15 ரன்னிலும் கோலி 19 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

    கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்திய பந்துவீச்சை சிதறடித்து அரைசதம் கடந்தும் அதிரடியாக விளையாடினார்.

    அதிரடியாக விளையாடி ஆரோன் ஃபின்ச் 76 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இறுதி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது ஷமி கடைசி ஓவரை வீசினார். தனது முழு அனுபவத்தையும் வெளிபடுத்திய ஷமி 4 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். கடைசி 4 பந்துகளில் 4 விக்கெட்களை (ஒரு ரன் அவுட் உட்பட) ஆஸ்திரேலியா இழந்தது.

    Published by:Vijay R
    First published:

    Tags: T20 World Cup