ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி 20 உலகக் கோப்பை - சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்.. ஆஸி- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

டி 20 உலகக் கோப்பை - சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்.. ஆஸி- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை!

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதல்

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதல்

டி -20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் -12 சுற்று இன்று தொடங்கும் நிலையில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaSydneySydney

  டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.  இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் முதல் பிரிவில் இடம் பிடித்துள்ளன. மேலும், இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ரவுன்ட்-ராபின் முறையில் நடைபெறும் இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும்.

  முடிவில் இரு பிரிவுகளிலும் இருந்தும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்நிலையில், சூப்பர்-12 முதல் பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி நண்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியா முதல்முறையாக மகுடம் சூடியது. இதற்கு இன்றைய போட்டியில் நியூசிலாந்து பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிட்னியில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, முதல் போட்டியே பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  முன்னதாக, நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் 'பி' பிரிவில் இடம் பிடித்திருந்த ஜிம்பாப்வே அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்தது. இதன் மூலம், இப்பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து "சூப்பர்-12" சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு போட்டியில் இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி, அயர்லாந்து அணியும் இரண்டாவது வெற்றியை ருசித்தது. அந்த வகையில், பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அயர்லாந்தும் "சூப்பர்-12" சுற்றுக்குள் நுழைந்தது. அதேவேளையில், தோல்வியைத் தழுவிய ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஏமாற்றத்துடன் வெளியேறின.

  இதையும் படிங்க: இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

  உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ளன. கிரிக்கெட் உலகமே எதிர்நோக்கியுள்ள இப்போட்டி, மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Australia, Cricket, ICC world cup, India vs Pakistan, T20 World Cup