ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

INDvsENG: இன்று டி20 அரையிறுதி.. பவுண்டரி ஈசிதான்.. கோலியின் கோட்டை.. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்தியா?

INDvsENG: இன்று டி20 அரையிறுதி.. பவுண்டரி ஈசிதான்.. கோலியின் கோட்டை.. அடிலெய்ட் மைதானத்தில் அசத்துமா இந்தியா?

மாதிரி படம்

மாதிரி படம்

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ள குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று அடிலெய்ட்டில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. சம பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இன்றைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அது ,மட்டும் அடிலெய்ட் மைதானம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இரு அணிகளுமே அதற்கு ஏற்றபோல் வீரர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

  குறிப்பாக இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்தியாவுடனாக போட்டியில் அவர் ஆடுவது சற்று வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால் அவருக்கு பதிலாகவும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோடர்ன் இங்கிலாந்து அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

  இதையும் படிங்க: கோலியின் மற்றோரு கோட்டை இது; அடிலெய்டு மைதானத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி?

  இங்கிலாந்து அணியில் பேட்டிங் வரிசையில் தற்போது மிகப்பெரிய அடி அவர்களுக்கு விழுந்துள்ளது. உலகின் டாப் ரேங்கில் உள்ள டி20 பேட்ஸ்மேன் டேவிட் மலானுக்கு தற்போது உடற்தகுதி பிரச்னை உள்ளதால் அவரும் இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க கிடைக்காது.இது இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும்.

  இந்திய உத்தேச அணி: கே.எல்.ராகுல், ரோகித்சர்மா (கே), விராட்கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக்பாண்டியா, ரிஷப் பன்ட் (அ)தினேஷ் கார்த்திக், அக்சர்பட்டேல்(அ) தீபக் ஹூடா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

  இங்கிலாந்து உத்தேச அணி : பட்லர் (கே), ஹேல்ஸ், பில்சால்ட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க்வுட் (அ) கிறிஸ் ஜோர்டன்.

  மைதானம்..

  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் உள்ள குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை ஏதுவாக இருக்கும், இதனால் இந்த போட்டியில் பவுண்டரிக்கு பஞ்சம் இருக்காது. மேலும் அடிலெய்ட் ஓவல் மைதானம் எப்போழுதும் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும்.

  இந்தியா அணிக்கு அடிலெய்ட் மைதானம் என்பது நமது சொந்த மைதானம் போல குறிப்பாக விராட் கோலி இந்த மைதானத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம். விராட் கோலி இதுவரை அடிலெய்ட் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 14 இன்னிங்ஸ் விளையாடி 907 ரன்களை குவித்துள்ளார். இதில் சராசரி 75.88 ஆகும். இதில் 5 சதங்கள் கூட அடங்கும் மேலும் கடைசியாக சூப்பர் -12 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்து அதனை நிரூபித்தும் இருக்கிறார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Cricket, T20 World Cup