ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

விராட் கோலியின் கோட்டை அது... அரையிறுதியில் தட்டித்தூக்குமா இந்தியா? எகிறும் எதிர்பார்ப்பு!

விராட் கோலியின் கோட்டை அது... அரையிறுதியில் தட்டித்தூக்குமா இந்தியா? எகிறும் எதிர்பார்ப்பு!

விராட் கோலி

விராட் கோலி

டி20 உலகக்கொப்பை தொடரில் சூப்பர்-12 சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அரையிறுதி போட்டிகள் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வரும் 10 ஆம் தேதி மோத உள்ளது.

  டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களுக்கு 186 ரன்களை ரன்களை சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் பாண்டிய மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

  இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி பலாத்காரம் : இளம்பெண் கொடுத்த புகாரில் ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரர்!

   இந்த நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் குரூப்-1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. குரூப் -2 பிரிவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

  நவம்பர் 9ஆம் தேதி பகல் 1:30 மணிக்கு சிட்னியில் துவங்கும் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதாலும் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது, மேலும் சிட்னி மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால்  இரு அணிகளிலும் வலுவான சுழல்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதனையடுத்து நவம்பர் 10ஆம் தேதி பகல் 1:30 மணிக்கு துவங்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை, இங்கிலாந்து எதிர்த்து களமிறங்க உள்ளது. அடிலைய்ட் மைதானம் வேகத்திற்கும், பேட்டர்களுக்கும் சாதகமாக இருக்கும். இந்திய அணியின் வீரர் விராட் கோலி எப்போதும் ஆஸ்திரேலியா மைதனாங்களில் சர்வ சாதாரணமாக ரன்களை குவிக்க கூடிய திறன் கொண்டவர். அதிலும் குறிப்பாக அடிலெய்ட் மைதானம் இவருக்கும் மிகவும் சாதகமான மைதானங்களில் ஒன்று. 2012 முதல் தற்போது வரை எப்போதும் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார்.  ஏற்கெனவே 5 சதங்களையும் அது மட்டும் இல்லாமல் சூப்பர் -12 சுற்று போட்டியில் கடைசியாக நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 64 ரன்கள் அடித்து தனது ஃபார்மை நிறுபித்து இருக்கிறார். இதனால் இந்த அரையிறுதி போட்டி கோலிக்கு சாதகமாக இருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India Vs England, T20 World Cup, Virat Kohli