ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்று இந்தியா, இன்று பாகிஸ்தான்.. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் யார்?

வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்று இந்தியா, இன்று பாகிஸ்தான்.. டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் யார்?

டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

T20 World Cup 2022 | கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐசிசி டி20 உலகக் கோப்பையில், இந்திய அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் தனது இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இப்போது அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமின்றி, மற்ற அணிகளின் முடிவுகளையும் நம்பியிருக்க வேண்டும். இந்த தொடரில் பாகிஸ்தானின் நிலை தான் , கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியைப் போலவே இருந்தது.

  ஒரே வருடத்தில் டி20 உலகக் கோப்பையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த முறை இந்திய அணிக்கு நேர்ந்தது போன்று சம்பவம் தான் தற்போது பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது. 2007ல் முதன்முறையாக டி20 உலகக் கோப்பை தொடங்கிய போது இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு வந்தன, ஆனால் அதன் பிறகு அதுப்போன்று நடக்கவில்லை. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலும் அது நடப்பதாகத் தெரியவில்லை.

  2021 டி20 உலகக் கோப்பையில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்தது. இதன் பின்னர் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட போது தோல்வியை சந்தித்தது. இந்த முறை பாகிஸ்தானிக்கும் அப்படித்தான் நடக்கிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானனை இந்திய அணி வீழ்த்திய நிலையில், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 2021 தொடரில் இந்தியா முதல் 2 போட்டிளில் தோற்றாலும் அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை.

  Also Read : ரியல் மிஸ்டர் பீனை அனுப்பவும்.. ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

  கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால், இப்போது அதே வாய்ப்பை பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வெற்றி பெற்றால் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு இந்தியா முன்னேறிவிடும்.

  தற்போதைய நிலவரப்படி சூப்பர் 12 சுற்றின் குரூப் பி பிரிவில் இந்திய அணி முதல் இடத்திலும், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் வங்கதேசமும், ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானும் இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமென்றால் இந்திய அணி இந்திய அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

  அதேப்போன்று பாகிஸ்தான் அணி மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அப்படி நடைபெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கும். கடந்த தொடரில் இந்தியாவின் இதே நிலை தான் தற்போது பாகிஸ்தானுக்கும் உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup