ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை - ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கும் இந்தியா

டி20 உலகக்கோப்பை.. இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை - ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கும் இந்தியா

கிரிக்கெட்

கிரிக்கெட்

விராட் கோலி அசுர பார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustralia

  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சூப்பர் சண்டேவாக அமையவுள்ளது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 யுத்தம் விறுவிறுப்படைந்துள்ளது. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு மூன்றாவது சுற்று போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

  பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி நான்கு புள்ளிகளோடு பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியா ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கவும், முதல் இடத்தை தக்கவைக்கவும் காத்திருக்கிறது. ஆடும் லெவனில் மாற்றம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இரண்டு பேட்டிகளிலும் சேர்த்து 13 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக தனது திறமையை நிரூப்ப வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

  கேப்டன் ரோஹித் நெதர்லாந்திற்கு எதிராக அரைசதம் விளாசி அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். விராட் கோலி அசுர பார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமாக உள்ளது. இரண்டு போட்டியிலும் ஆட்டமிழக்காமல் அடுத்தடுத்து அரைசதம் விளாசி 144 ரன்கள் குவித்துள்ளார். சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக், தினேஷ் கார்த்திக் என மிடில் ஆர்டரில் வருபவர்கள் மிரட்ட காத்திருக்கின்றனர்.

  பந்துவீச்சில் புவி, சமி, ஹர்த்தீப் மூவர் கூட்டணியை சமாளிப்பது தென் ஆப்ரிக்காவிற்கு சவாலான ஒன்றே. இவர்களோடு சேர்த்து சுழலில் சுருட்ட அக்‌ஷர், அஸ்வின் கூட்டணி தயாராகவுள்ளது. இரண்டு போட்டிகளில் அடைந்த வெற்றி அணியை வலுவாக கட்டமைத்ததுடன் கோப்பையை கைப்பற்றும் அணியாக கர்ஜித்துள்ளது.

  Also Read:  இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - காரணம் இதுதான்!

  தென் ஆப்ரிக்க அணியிடம் மழை இந்த உலக கோப்பையிலும் விளையாட்டு காட்டியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மழையால் போட்டி ரத்தானது. இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அசுர பலத்தை உறக்க சொல்லியுள்ளது. ரோசோவ் சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

  ஓபனர் டிகாக்கின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் திண்டாட்டம் தான். கேப்டன் பௌமா கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ரபாடா - நாட்ஜே வேகக்கூட்டணி கேஷவ் - சாம்சி சுழல் கூட்டணி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டும் அளவிற்கு ஃபார்மில் உள்ளது மழை பெய்யாவிட்டால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் சண்டே தான்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Cricket, Dinesh Karthik, Ind vs sa, Kl rahul, Rohit sharma, T20 World Cup, Tamil News, Virat Kohli