ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

IND VS BAN: காப்பாற்றிய மழை... கடைசி பந்துவரை பரபரப்பு.. போராடி வென்ற இந்தியா!

IND VS BAN: காப்பாற்றிய மழை... கடைசி பந்துவரை பரபரப்பு.. போராடி வென்ற இந்தியா!

இந்திய அணி

இந்திய அணி

வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆஸ்திரேலியாவில் களைகட்டி வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எதிர்பார்ப்பை எகிரச்செய்துள்ள 4வது சுற்று போட்டியில் இந்திய - வங்கதேச அணிகள் இன்று மோதின.

  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். ரோகில் சர்மா 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். இதையடுத்து விராத் கோலி களம் புகுந்தார். இந்த இணை பொறுப்பாக விளையாடி துரிதமான ரன் சேர்க்கையில் ஈடுபட்டது.

  கேஎல் ராகுல் 32 பந்துகள் சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். அக்‌ஷர் படேல் 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பங்களாதேஷ் களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது வங்கதேசம். விக்கெட் இழப்பு ஏதுமின்றி 7ஓவருக்கு 66 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

  பின்னர் மழைவிடும் வரை வீரர்கள் காத்திருந்த நிலையில் மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. மழையால் மொத்த ஓவர் 16 குறைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு இலக்கு 151 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழைக்கு முன்பு வரை அதிரடியாக ஆடிய வங்கதேசம் மழைக்கு பிறகு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மழைக்கு பிறகான மைதான மாற்றத்தால் பேட்டிங்கில் வங்கதேசம் தடுமாறியது. இறுதியில் 16 ஓவருக்கு 145  ரன்கள் எடுத்து வங்கதேசம் தோல்வியை தழுவியது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: T20, T20 World Cup