ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா?

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா?

மாதிரி படம்

மாதிரி படம்

இப்படி ஆட்டம் மழையால் நாளை நடைபெறும் போட்டிகள் பாதிக்கப்பட்டால் குரூப்-2 உள்ள அணிகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி மழையால்  தடைபட்டால் பல விபரீதங்களை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப்-1ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இடம் பிடித்துள்ள குரூப்-2யில் பெரும் குழப்பமான நிலையே நிலவி வருகிறது. இதனால் இந்தியா- ஜிம்பாவே, பாகிஸ்தான் -வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா -நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிகள் முடிந்த பின்னரே எந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது தெரிய வரும்.

  இந்த நிலையில் நாளை குரூப்-2 பிரிவில் நடைபெறும் இந்தியா-ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்கா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டங்களில் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் தோல்வியை சந்தித்தாலோ அல்லது போட்டிகள் மழையால் நிறுத்தப்பட்டலே புள்ளி பட்டியலே தலைகீழாக திரும்பும் வாய்ப்புகள் உள்ளது.

  தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பும், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று, இந்திய அணி தோல்வியடைந்தால் இந்திய அணி வெளியேறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் தோல்வியை சந்தித்தாலும் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. இப்படி குரூப் 2வில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட 4 அணிகக்கும் அரையிறுதி வாய்ப்புகள் உள்ளது.

  இதையும் படிங்க: டி 20 உலககோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறியது..

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் அரையிறுதிக்கு மற்ற 2 அணிகளுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது கடைசி சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.  ஆனால் போட்டியை தோற்றாலோ அல்லது போட்டி மழையால் வாஷ் அவுட் செய்யப்பட்டாலோ என்ன ஆகும் தெரியுமா?

  இந்தியா தற்போது 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தென்னாப்பிரிக்கா (5 புள்ளிகள்) மற்றும் பாகிஸ்தான் (4 புள்ளிகள்) முறையே 2 மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வே- இந்தியா போட்டியில் மழை வந்து 5 ஓவர் கூட போட்டி  நடக்கவில்லை என்றால், இரு அணிகளும் ஒரு புள்ளிகள் வழங்கப்படும். அப்படியானால் இந்தியாவுக்கு 7 புள்ளிகள் கிடைக்கும், அப்படி கிடைத்தால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் இடத்தில் நிலைத்திருப்பதற்கான வாய்ப்பை இந்தியா இழக்க நேரிடும். நெதர்லாந்தை வீழ்த்தி, ரன் ரேட் எடுத்தால் தென்னாப்பிரிக்கா அணி குரூப்-2 பிரிவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறும்.

  மேலும் தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகள் தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளில் ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். ஒரு வேளை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தோல்வியை சந்தித்தால் சிறப்பான ரன்ரேட்டில் இருக்கும் பாகிஸ்தான் அணி கூட முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்க இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வெற்றி பெற்றால் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் டி20 உலககோப்பை தொடரை விட்டு வெளியேறும்.

  இதையும் படிங்க:சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

  இப்படி இந்தியா இடம்பெற்றுள்ள குரூப்-2 பல குழப்பங்கள் நிறைந்திருக்கும் நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற போகிறார்கள் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. எது, எப்படியே, ஆசியாவை சேர்ந்த ஒரு அணி நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: India, Pakistan cricket, South Africa, T20 World Cup