பலவிதமான காயங்களினால் பவுலிங்கைத் தவிர்த்து வந்த ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் தோனி, ரவிசாஸ்திரி, கோலி, மற்றும் பயிற்சியாளர்கள் முன்னிலையில் பந்து வீசி சோதனை மேற்கொண்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டையில் பந்துபட்டதால், காயமடைந்திருப்பாரோ என்ற அச்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த காயமும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து வரும் 30ம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாண்டியா பேட்ஸ்மெனாகத் தொடர்ந்தால் இந்தியா 6வது பந்து வீச்சாளரை சேர்க்க முடியாது என்பதே எதார்த்த நிலை, ஆகவே ஒன்று ஹர்திக் பாண்டியா பவுலிங் போட வேண்டும் இல்லையே பேட்ஸ்மெனாக அவர் தொடர அனுமதிக்கப்படக்கூடாது என்பதே முன்னாள் வீரர்களின் கருத்தாக இருந்து வருகிறது. அணியில் கூடுதலாகப் பந்துவீச்சாளரைச் சேர்ப்பதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களை வீசினால் அணியில் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்கத் தேவையில்லை என்ற ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவை பந்துவீச பயிற்சி அளிக்கப்பட்டது.
தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, மென்ட்டர் தோனி ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஹர்திக் பாண்டியா பந்துவீசி பயிற்சி எடுத்தார். இது தவிர பந்துவீசிப் பயிற்சி எடுத்து முடித்ததும், ஹர்திக் பாண்டியாவுக்கு த்ரோ செய்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியாவை வைத்து கொண்டு இப்ப காயமடைவாரோ அப்போ காயமடைவாரோ என்ற நிலைக்கு பதில் அவருக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டு ரிச்ர்வில் இருக்கும் அதிரடி ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் அய்யரைக் கொண்டு வருவது உண்மையில் நல்ல விஷயம் என்றே பலரும் கருதுகின்றனர், ரசிகர்கள் பார்வையும் அதுவாகவே உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக இந்திய லெவன் இப்படியிருந்தால் நன்றாக இருக்கும்:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.