• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021: இப்படியெல்லாம் நடந்தால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்குத் தகுதி பெறும்

T20 World Cup 2021: இப்படியெல்லாம் நடந்தால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்குத் தகுதி பெறும்

WI vs BAN

WI vs BAN

  • Share this:
    பங்களாதேஷ் அணிக்கு எதிராக மோசமாக ஆடியும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற முடியும் என்றால் வங்கதேச அணியின் நிலை பரிதாபம் தான். நேற்று உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணியை த்ரில் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸ் அணி வென்று புள்ளிகள் பட்டியலில் தன் கணக்கைத் தொடங்கியது.

    ஆந்த்ரே ரசலின் அற்புதமான கடைசி ஓவர், டுவைன் பிராவோ 19வது ஓவரில் ஒரு சிக்ஸ் கொடுத்தாலும் மற்ற 5 பந்துகளில் முடக்கியது, ஜேசன் ஹோல்டரின் அற்புதமான பந்து வீச்சு ஆகியவை வெஸ்ட் இண்டீசின் மோசமான பீல்டிங், பேட்டிங்கிலும் அந்த அணியை வெற்றி பெறச் செய்தது. பேட்டிங்கில் நிகலஸ் பூரான் அபார இன்னிங்ஸை அதிரடியில் அந்த நிலையிலும் ஆடியது பெரிய விஷயம் அதே போல் கடைசியில் ஜேசன் ஹோல்டர் லிட்டன் தாஸுக்கு பவுண்டரியில் சிக்ஸுக்குப் போன ஷாட்டை எம்பிப் பிடித்த கேட்ச் ஆகிய துண்டு துணுக்கு அபார கணங்களால் வெஸ்ட் இண்டீஸ் வென்றது, மொத்தமாகப் பார்த்தால் தொழில் நேர்த்தியுடன் ஆடியது வங்கதேசம்தான். ஆனால் வென்றதென்னவோ வெஸ்ட் இண்டீஸ், இதுதான் டி20 கிரிக்கெட்டின் தாரதம்மியம் என்பது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகளில் 2ல் தோற்று ஒன்றில் வென்றுள்ளது மீதமுள்ள போட்டிகளையும் வென்று 6 புள்ளிகள் எடுத்து காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து 10 புள்ளிகளுடன் முடிந்தால் 5 அணிகள் 4 புள்ளிகளில் முடியும். வெஸ்ட் இண்டீஸின் தற்போதைய நெட் ரன் ரேட்டின் படி இந்த வழியில் செல்வது கடினம்.

    வெஸ்ட் இண்டீஸ் 6 புள்ளிகளுடன் முடிகிறது என்று வைத்துக் கொண்டால் அந்த அணி தகுதி பெறும் வாய்ப்பு என்னவென்பதைப் பார்ப்போம்:

    இங்கிலாந்து அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன அந்த அணி இன்னும் 2 போட்டிகளில் வெல்ல வேண்டும். இதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதோடு தென் ஆப்பிரிக்கா அல்லது இலங்கையில் ஏதாவது ஒரு அணியை வீழ்த்த வேண்டும்.

    வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற முதலில் நடக்க வேண்டியது ஆஸ்திரேலியா ஏற்கெனவே 4 புள்ளிகளை எடுத்துள்ள நிலையில் அடுத்த 3 போட்டிகளிலும் தோல்வி அடைய வேண்டும். அதாவது இப்போதுள்ள 4 புள்ளிகளுடனேயே ஆஸ்திரேலியா வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

    இலங்கையும் தென் ஆப்பிரிக்காவும் தங்களுக்கு இருக்கும் மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் மட்டும்தான் வெல்ல வேண்டும். சனிக்கிழமையன்ரு தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி இங்கிலாந்திடம் தோற்க வேண்டும். பங்களாதேஷ் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் தோற்க வேண்டும். இதெல்லாம் நடந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி நெட் ரன் ரேட் இல்லாமல் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

    ஆனால் இதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை நவம்பர் 4ம் தேதி ஜெயிக்க வேண்டும், நவம்பர் 6ம் தேதி ஆஸ்திரேலியாவை ஜெயிக்க வேண்டும். இவையெல்லாம் நடக்குமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: