போர்ச்சுக்கல் கால்பந்து லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது முன்னால் இருந்த கோககோலா பாட்டில்களை தள்ளி வைத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது, அதே போல் வார்னரும் செய்தார்.
ஆனால் வார்னர் இப்படிச் செய்த சிறிது நேரத்திலேயே உதவிப்பணியாளர் ஒருவர் வந்து அதை இருந்த இடத்திலேயே வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இலங்கைக்கு எதிராக பலரது கேலிகளைத் தகர்த்து 42 பந்துகளில் 65 ரன்கள் விளாசிய வார்னர், கோககோலா பாட்டில்களை திரும்ப வைக்கும் போது, “இது ரொனால்டோவுக்கு நல்லதென்றால் எனக்கும்தான்” என்று லேசான நக்கல் இழையோட கூறியது வைரலாகியுள்ளது.
யூரோ 2020க்கு எப்படி கோககோலா நிறுவனம் ஸ்பான்சரோ அதே போல்தான் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2021-க்கும் கோககோலா ஸ்பான்சர் நிறுவனம். இலங்கையை வீழ்த்த பார்முக்குத் திரும்பிய இன்னிங்ஸை ஆடிய வார்னர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தார். அப்போது இரண்டு கோக் பாட்டில்கள் மேஜையில் அவர் முன்னால் வீற்றிருந்தன.
அதைப் பார்த்த வார்னர், ‘நான் இதை அகற்றலாமா?’ என்று கேட்டு அகற்றியும் விட்டார், பிறகு மீண்டும் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவர் வந்து பாட்டில்களை இருக்கும் இடத்திலேயே வைக்கச் சொன்னார். அப்போது மிகவும் சூட்சம நகைச்சுவை இழையோட, “கிறிஸ்டியானோவுக்கு இது நல்லதென்றா. எனக்கும் நல்லதுதான்” என்றார் வார்னர். அதன் வீடியோ இதோ;
கோக் நிறுவனம் டி20 உலகக்கோப்பை தொடரின் மிகப்பெரிய ஸ்பான்சராகும். நடப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் 2023 வரை ஐசிசி கிரிக்கெட் தொடர்களின் ஸ்பான்சராக கோக் நிறுவனம் ஒப்பந்திக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோ இதைச் செய்த போது அது வெற்றி பெற்றது, பலரும் அவரது செய்கையை ரிபீட் அடித்தனர். ஆனால் அப்போதும் யூரோ 2020 அமைப்பாளர்கள் அது இன்னொருமுறை நிகழாதவாறு பார்த்துக்க் கொண்டனர், இங்கு வார்னர் கையை வைத்தவுடனேயே முடிந்து விட்டது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.