• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021:தேசத்தை எதிர்கொள்ளுங்கள் கோலி, ஓடி ஒளியக்கூடாது: அசாருதீன் கடும் சாடல்

T20 World Cup 2021:தேசத்தை எதிர்கொள்ளுங்கள் கோலி, ஓடி ஒளியக்கூடாது: அசாருதீன் கடும் சாடல்

அசாருதீன்

அசாருதீன்

இந்திய அணியின் நெட் ரன் ரேட்டும் மோசமாக உள்ளது, நமீபியா கூட 2 புள்ளிகள் பெற்ற நிலையில் இந்திய அணி இன்னும் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் இருப்பது ரசிகர்களின் கோபாவேசத்தை அதிகரித்துள்ளது.

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பை இந்திய கேப்டன் விராட் கோலி துறந்தார், அவருக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா கேள்விகளுக்குப் பதில் அளித்தார், இந்த விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    கோலியின் இந்தச் செயல் ஊடகவியலாளர்கள், கிரிக்கெட் பண்டிதர்கள், முன்னாள் வீரர்கள் சிலர், அதில் குறிப்பாக முகமது அசாருதீன் ஆகியோருக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

    முகமது அசாருதீன் கூறும்போது, “தோற்பதில் ஒன்றும் வெட்கப்பட வேண்டியதில்லை. ஆனால் வந்து பேச வேண்டும். இதுதான் சரியாக இருக்க முடியும். தோல்விக்குக் காரணம் என்ன என்பதை மக்கள் அறிய வேண்டும். பும்ரா பேசுவதும் கோச் வந்து பேசுவதும் நீங்கள் பேசுவதும் ஒன்றாகி விடாது.

    பொதுமக்களைச் சந்தித்தாக வேண்டும். நீங்கள் வந்து காரணங்களை விளக்கவில்லை என்றால் மக்கள் என்ன நினைப்பார்கள்? தேவையற்ற வதந்திகள் பரவவே இது வழிவகுக்கும். கோலி தேசிய ஊடகங்களை சந்தித்தாக வேண்டும், அதுதான் முறை. மக்கள் நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், தோல்விக்கு ஆன காரணங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் பத்திரிகைகள் தானே, இதைப் புறக்கணிக்கலாமா?” என்று கோலியை சாடியுள்ளார் அசாருதீன்

    முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் 1992, 96, 99 உலகக்கோப்பைகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்திய அணியின் வாய்ப்புகள் கத்தி முனையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அணியின் தலைவர் வந்து பேச வேண்டும் என்கிறார் அசார். மக்களுக்கு குறைந்த பட்சம் ஏன் இப்படி ஆடினார்கள், என்ன காரணம், பிட்சா?, போட்டியின் நேரமா, பனிப்பொழிவா, வீரர்களின் அவுட் ஆஃப் பார்மா என்பதை மக்கள் அறிய வேண்டும் இதற்கு கேப்டன் தான் பேச வேண்டும் என்கிறார் அசாருதீன்.

    Also Read: T20 World Cup 2021: இந்திய வீரர்கள் ரோபோக்கள் அல்ல: கெவின் பீட்டர்சன் ஆதரவு

    இந்திய அணியின் நெட் ரன் ரேட்டும் மோசமாக உள்ளது, நமீபியா கூட 2 புள்ளிகள் பெற்ற நிலையில் இந்திய அணி இன்னும் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் இருப்பது ரசிகர்களின் கோபாவேசத்தை அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: