• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • இங்கிலாந்தின் டபுள் உலகக்கோப்பைக் கனவு தகர்ந்து போகும்- 2 ‘மாஸ்’ வீரர்கள் இல்லையே- யுஏஇ பிட்ச்கள் சரிவராது

இங்கிலாந்தின் டபுள் உலகக்கோப்பைக் கனவு தகர்ந்து போகும்- 2 ‘மாஸ்’ வீரர்கள் இல்லையே- யுஏஇ பிட்ச்கள் சரிவராது

மோர்கன்

மோர்கன்

2019 உலகக்கோப்பையை சர்ச்சைக்குரிய முறையில் வென்ற இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை எனும் டபுள் லக்கி பிரைஸ் அடிப்பது மிகமிகக் கடினம் யுஏஇ யில் உள்ள மந்தமனா பிட்ச்கள் இங்கிலாந்தின் பேட்டிங், பவுலிங்குகு உதவாது.

 • Share this:
  2019 உலகக்கோப்பையை சர்ச்சைக்குரிய முறையில் வென்ற இங்கிலாந்து டி20 உலகக்கோப்பை எனும் டபுள் லக்கி பிரைஸ் அடிப்பது மிகமிகக் கடினம் யுஏஇ யில் உள்ள மந்தமனா பிட்ச்கள் இங்கிலாந்தின் பேட்டிங், பவுலிங்குகு உதவாது.

  அப்படியே இங்கிலாந்து கோப்பையை வெல்ல முடியும் என்றால் அதற்கு மதிப்பு மிக்க வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் வேண்டும், அனைத்திற்கும் மேலாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வேண்டும், இருவருமே இல்லை. மோர்கன் பேட்டிங் பார்ம் இங்கிலாந்து அணியில் இருக்கத் தகுந்ததுதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

  புள்ளி விவரங்கள்:

  இங்கிலாந்தின் டி20 புள்ளி விவரங்களைப் பார்த்தால் அந்த அணிக்குத்தான் வெற்றி சாதகமாக இருப்பது போல் தெரியும். ஏனெனில் கடந்த 11 இருதரப்பு சர்வதேச டி20 போட்டிகளில் இங்கிலாந்து 9-ல் வென்று ஒன்றில்தான் தோற்றுள்ளது, நேற்று வார்ம் அப்பில் நம்மிடம் தோற்றது. இதில் 6 போட்டிகளில் இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக 5-ல் வென்றது. ஆனால் இந்தியாவிடம் 3-2 என்று தோற்றபோது இங்கிலாந்தின் பலவீனங்கள் அம்பலமாகின.

  2016 டி20 உலகக்கோப்பை பைனலில் பென் ஸ்டோக்சை அந்த பைனல் ஓவரில் பிராத்வெய்ட் வெளுத்து வாங்கியதை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள் மேலும் அந்த இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட் கூட இருந்தனர். ஜாஸ் பட்லர் நல்ல பினிஷர் ரோலிலிருந்து பெரிய அதிரடி ஓப்பனராகி விட்டார். டேவிட் மலான் பிரமாதமான டி20 வீரராக நம்பர் 1 ரேங்கிங்கில் உள்ளார். ஆனால் ஸ்லோ பிட்ச்களில் இவர் சோபிப்பது சந்தேகம்.

  லியாம் லிவிங்ஸ்டன் ஒரு அபாய வீரர், பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியை தன் லாலி பாப் லெக் ஸ்பின்னிலேயே வீழ்த்தினார், ஆனால் ஸ்லோ பிட்சில் பேட்டிங்கில் அவ்வளவாக ஐபிஎல் தொடரில் சோபிக்கவில்லை. மோர்கன் பார்ம் இப்போதைக்கு மீள முடியாதது, யுஏஇ ஸ்லோ பிட்ச்கள் அவருக்கு உண்மையில் ஒரு பேய்தான், ஆகவே மீதமிருப்பது ஜானி பேர்ஸ்டோ, உண்மையில் பெரிய பார்மில் இருக்கும் மொயின் அலி ஆகியோர்தான். ஜேசன் ராய் சன் ரைசர்ஸுக்காக சில முக்கிய அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், ஆனால் இது சர்வதேச கிரிக்கெட் இதில் ஸ்லோ பிட்சில் அவரை மட்டையாக்கினாலும் ஆக்கி விடலாம்.  பவுலிங்:

  பவுலிங்கில் ஆதில் ரஷீத் இருக்கிறார், இவரது லெக் ஸ்பின் எந்த அணிக்கும் அன்றைய தினத்தில் அபாயகரமாகும், அதே போல் மொயின் அலி யுஏஇயில் அனுபவமிக்கவர். லியாம் லிவிங்ஸ்டன் இவர் அடி வாங்கினாலும் வாங்குவார். மார்க் உட் பயனளிப்பார் ஆனால் யுஏஇயில் வேகம் காட்டினால் பின்னி எடுக்கலாம். டேவிட் வில்லே., கிறிஸ் வோக்ஸ் போன்றவர்கள் ஆல்ரவுண்ட் திறமை படைத்தவர்கள்.

  கேள்வி என்ன?

  உண்மையான கவலை இங்கிலாந்துக்கு என்னவெனில் அவர்களது சமீபத்திய வெற்றிகள் எல்லாமே ரன் குவிப்பு ஃபிளாட் பிட்ச்களில் வந்தவை. ஆனால் இங்கு பனிப்பொழிவு, பிட்ச் மந்தமாக இருப்பது, அனைத்திற்கும் மேலாக உஷ்ணம், இரவில் அதிகரிக்கும் ஈரப்பதம் உருவாக்கும் கூடுதல் உஷ்ணம். நிச்சயம் பிட்ச் இங்கிலாந்துக்கு ஒரு எதிரி, அதே போல் எதிரணியினரின் ஸ்பின் பவுலிங்கும் பெரிய அச்சுறுத்தல்தான்.

  பிட்ச் ஸ்லோ என்றால் இங்கிலாந்து வங்கதேசம், ஆப்கானிஸ்தானிடம் கூட தோற்கக்கூடிய அணிதான். ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் எனும் இரு மாஸ் வீரர்கள் இல்லாததும் மோர்கனின் மோசமான பார்ம், மோசமான பீல்டிங்கும், பிட்ச்களும் இங்கிலாந்தின் டபுள் உலகக்கோப்பை கனவை தகர்க்கவே செய்யும் என்று கூற முடியும்.

  இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் குவாலிஃபை ஆகும் இரண்டு அணிகள் உள்ளன. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் அக்டோபர் 23ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய நேரம் மாலை 7.30 மணி போட்டியில் மோதுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: