மனைவியை பிரிந்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோகம்

ஷிகார் தவான்

ஆயிஷா முகர்ஜி இன்ஸ்டாகிராமில் விவாகரத்து முடிவை உறுதி செய்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோகமான செய்தி கிடைத்துள்ளது.

 • Share this:
  இந்திய அணியின் நட்சத்திரங்களுள் ஒருவராக திகழும் 35 வயதான ஷிகர் தவான், அவரின் மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளார். இதன் மூலம் 10 ஆண்டுகளாக நீடித்து வந்த அவர்களின் திருமண பந்தம் முறிந்துள்ளது. இந்த தகவலை ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்தார்.

  இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷிகார் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் மூத்த வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

  ஷிகார் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்றாலும் டி20 தொடரை இழந்தது. டி20 உலகக் கோப்பை முன் இந்திய அணியின் கடைசி டி20 தொடராக இது அமைந்தது. இந்த தொடருக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ஷிகார் தவானுக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

  Also Read : இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -5வது டெஸ்ட் நடக்குமா?

  ஆயிஷா முகர்ஜி இன்ஸ்டாகிராமில் விவாகரத்தை உறுதி செய்த 24 மணி நேரத்தில் ஷிகார் தவானுக்கு அடுத்த சோக செய்தியாக இது அமைந்தது. ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் விவாகரத்து தொடர்பாக ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவைப் பகிர்ந்து கொண்டார்.

  இந்திய அணி

  விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிசந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

  ரிசர்வ் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: