• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இனி ட்விட்டரில் டி20 உலகக் கோப்பை போட்டிகள்... சூப்பர் அறிவிப்பு

இனி ட்விட்டரில் டி20 உலகக் கோப்பை போட்டிகள்... சூப்பர் அறிவிப்பு

ட்விட்டர்

ட்விட்டர்

T20 World Cup | கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது ட்விட்டர்.

  • Share this:
    20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் லீக் ஆட்டங்களும், பயிற்சி ஆட்டங்களும் நிறைவடைந்துள்ளன. சூப்பர் 12 போட்டிகள் விரைவில் இன்று தொடங்க உள்ளது. மொத்தம் 29 நாட்கள் டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

    ‘ஐபிஎல்’ போட்டிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியானது சூடு பிடித்துள்ளது. இதனைக் காண ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது ட்விட்டர். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது ட்விட்டரில் எக்ஸ்ப்ளோர் டேப் மற்றும் லைவ் பக்கத்தில் ஸ்கோர்கார்டு இனி தோன்றும் வகையில் உருவாக்கப்படும் என்று கூறி உள்ளது.

    இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம், கிரிக்கெட் போட்டிகளின் போது ட்விட்டரில் எக்ஸ்ப்ளோர் டேப் மற்றும் லைவ் பக்கத்தில் ஸ்கோர்கார்டு இனி தோன்றும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் யூசர்கள் இதனை பயன்படுத்தலாம். இனி வரக்கூடிய வாரங்களில் இந்த ஸ்கோர்கார்டு முறையானது, யூசர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ‘அப்டேட்’ செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    Also Read : டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கி விடாதீர்கள்: ஷேன் வார்ன் எச்சரிக்கை

    இத்தகைய வசதியை ட்விட்டர் ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் செப்டம்பரில் இதனை சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களின் வரவேற்பு காரணமாக இந்த வசதி இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது, இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம்.

    அவர்களுக்காகவே இந்த அம்சம் எஸ்க்க்ளுசிவாக உருவாக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய மொழிகளில் டி20 உலக்கோப்பை பற்றிய எல்லா அப்டேட்களையும் உடனக்குடன் பெற முடியும். இந்த சோதனையை ட்விட்டர் தற்போது ஐஓஎஸ், வெப் மற்றும் ஆண்ட்ராய்ட் பிரவுசரில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வெறும் ட்வீட் மட்டுமில்லாமல் கம்யூனிட்டி மற்றும் ஸ்பேஸ் போன்ற வசதிகளையும் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்காக உருவாக்கி உள்ளது.

    Also Read : டி20 உலகக்கோப்பையில் கலக்கிய இந்திய பவுலர்கள் யார் யார்?

    இதில் ட்விட்டர் யூசர் ஒருவர் மற்றொருவரை குழுவில் சேர்க்கலாம். மற்றவர்கள் ஷேர் செய்துள்ள ட்வீட்களுக்கு பதில் அளிக்கலாம். ட்விட்டர் ஸ்பேஸிலும் குழுவுடன் கலந்துரையாடலாம். வழக்கம் போல பொது ட்வீட்களைப் போலவே, எவரும் இந்த கிரிக்கெட் தொடர்பான ட்வீட்களையும் படிக்கலாம். இதனை பகிரலாம், மேற்கோள் கட்டலாம், புகார் அளிக்கலாம் என பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த அம்சம் ட்விட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: